வே.மீனாட்சி சுந்தரம்,
மூத்த தலைவர், சிபிஐ(எம்)
தமிழ் மாநில செயற்குழுவில் அவ ரோடு இணைந்து செயல்பட எனக்கு வாய்ப்புக் கிடைத்தது. அவரது ஆளுமை என்னை வியக்க வைக்கிறது. லெனின் வகுத்த பாட்டாளி வர்க்க கட்சியின் ஜனநாயக மத்தியத்துவ கோட்பாட்டின் நடமாடும் சான்றாக தோழர் என். எஸ் விளங்குகிறார். கட்சி மாநாடுகளில் விவாதித்து நிறைவேற்றிய தீர்மானங்களே அவரது சொல்லுக்கும் செயலுக்கும் வழிகாட்டி. அவரது சட்டமன்ற உரைகள் மாற்றாரையும் சிந்திக்க வைக்குமே தவிர புண்பட வைக்காது. அதேவேளையில் அந்த பேச்சில் மென் மையான எள்ளலும் இருக்கும். சொல்லடுக்கோடு கருத்தை முன்நிறுத்தும் அவரது பாங்கு அலாதியானது. இயற்கையாக வாய்த்த அனைவரையும் ஈர்க்கும் கணீர்குரல் அனைவரை யும் ஈர்த்துக் கட்டிப் போட்டு விடும். தன்மனதில் சொல்ல வந்த கருத்தை பதித்து விடுவார். மேடையில் அவர் பேசிய பிறகு யார் பேசினாலும் எடுபடாது.
பாட்டாளி வர்க்கக் கட்சியின் உறுப்பினர் நாடாளுமன்ற மற்றும். சட்டமன்ற உறுப்பினரானால் ஏன் சித்தரவதை செய்யும் சிறைக்கூடம் சென்றாலும் போர்முனையாக கருதி எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கு சிறந்த எடுத்துக் காட்டாக அவர் விளங்குகிறார். தவறுகள் செய்வது மானுட இயல்பு. அது தோழர் என்எஸ் சிற்கும் பொருந்தும். அந்த தவறு கள் கட்சியின் கூட்டு முடிவாக இருக்குமே தவிர, முடிவை மீறி தன்னிச்சை போக்கில் செய்ததாக ஒன்று கூட இராது. தவறு களை திருத்தி செயல்படும் கட்சியாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இருப்பதற்கு இவரது பங்களிப்பு பாராட்டுக்குரியது. அவ ரது சித்தாந்த உறுதி கம்யூனிஸ்ட் வாழ்க்கைக்கு எடுத்துக்காட்டு. பிரிட்டீஷ் ஆட்சிக் கால சிறை, விடுதலைக்குப் பின்னும் சிறைவாசம் என்பது கம்யூனிஸ்ட்டுகளின் வாழ்க்கையாகும். தோழர் என்.எஸ். போன்றோரின் அன்றைய சிறைவாசப் போ ராட்டமே பல சீர்திருத்தங்களை சட்ட வடிவம் பெறவைத்தது. அவரது சிறை மற்றும் லாக்அப் அனுபவங்களைத் தொகுத் தாலே சிறைக்கொடுமைகள் அதை எதிர்த்த கம்யூனிஸ்ட்டு களின் போராட்டங்களின் வரலாறு ஆகிவிடும்.

தோழர் என். எஸ்.ஐ நெருங்கி அறியுமுன்னர் எனக்கொரு சந்தேகம் இருந்தது. கட்சி முடிவை தனது செயலுக்கு வழி காட்டியாக கொண்டவர், ஒன்றுபட்ட கட்சியின் முடிவை ஏற் காமல் வெளியேறி மார்க்சிஸ்ட் கட்சியின் துவக்க பங்களிப்பை செய்ய எப்படி முன்வந்தார் என்பது எனக்கு புதிராகவே இருந்தது. நெருங்கி அறிந்த பிறகே அவரது மார்க்சிச- லெனினிச சித்தாந்த பிடிப்பின் தன்மையை உணர முடிந் தது. மார்க்சிச- லெனினிச நூல்கள் மட்டுமல்ல, எதையும் கசடறகற்கும் ஆற்றல் அவரிடமிருந்தது. அவரது அரசியல் மற்றும் சிறை அனுபவங்கள், நமது மனதை பக்குவப்படுத்த, ஒரு சிறந்த கம்யூனிஸ்ட்டாக பணிபுரிய நமக்கு போதிக்கிறது.