tamilnadu

தோழர் கே.தேவராஜ் காலமானார்... 1ம்பக்கத் தொடர்ச்சி...

அவரை மருத்துவமனையில் சென்று பார்த்தேன். எப்போதும் வெடிப்புடன் பேசும் அவர் அன்று கதறியழுதார். இவ்வளவு சீக்கிரம் படுக்கையில் விழுந்துவிட்ட ஆதங்கம் அது. குணம் பெற்று மீண்டு வருவார் என்று எதிர்பார்த்தேன்.
மதுரை மாவட்ட விவசாயிகள் சங்கத் தலைவராக, செயலாளராக, மாநிலக்குழு உறுப்பினராக பத்து ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றியவர். விவசாயிகளுடைய பிரச்சனைகளுக்கு தீர்வு காண அதிகாரி
களை தொடர்ந்து சந்தித்து வலியுறுத்துவார். விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் தவறாமல் பங்கெடுத்து மாவட்ட முழுவதுமுள்ள விவசாய பிரச்சனைகளை அக்கூட்டத்தில் எழுப்புவார். சுமார் 40 ஆண்டுகாலம் மக்களுக்கான பணியில் தன்னை 
அர்ப்பணித்துக் கொண்டவர். தோழர். தேவராஜ் அவர்கள் மறைவிற்கு செவ் வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.அவரை இழந்து தவிக்கும் அவருடைய துணைவியார், மகன், மகள் மற்றும் உறவினர்களுக்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலக்குழு சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.