திருநெல்வேலி/தூத்துக்குடி, ஜூன் 12- வாலிபர் சங்கத்தின் நெல்லை மாவட்ட முன்னாள் பொருளாளர் அசோக் கடந்த ஆண்டு சாதி வெறி யர்களால் வெட்டி படுகொலை செய்ய ப்பட்டார். இந்நிலையில் அவரின் முத லாம் ஆண்டு நினைவு தினம் வெள்ளிக்கிழமை கடைப்பிடிக்கப்பட் டது.
திருநெல்வேலி
நெல்லை கரையிருப்பில் உள்ள அவரது நினைவிடத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட் டச் செயலாளர் பி.உச்சிமாகாளி தலை மையில் அஞ்சலி செலுத்தப்பட்டது. சங்க மாநிலத் தலைவர் ரெஜிஷ்கு மார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் கே.ஜி.பாஸ்க ரன், மாவட்ட செயற்குழு உறுப்பி னர்கள் வீ.பழனி, ஆர்.மோகன், எம்.சுடலைராஜ், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டத் தலை வர் ஆர்.மதுபால், மாவட்டச் செயலா ளர் ஸ்ரீராம், மாவட்டப் பொருளாளர் ஆலங்குளம் பாலு, மாதர் சங்க மாவட்டத் தலைவர் மேனகா, மாதர் சங்க மாவட்டச் செயலாளர் வழக்கறி ஞர் கு.பழனி, வாலிபர் சங்க நிர்வாகி கள் முருகேசன், ஸ்ரீராம், கருணா, கௌதம், டி.நாராயணன், ராஜேஷ், மாறவர்மன், செல்லத்துரை உள்ளிட் டோர் அஞ்சலி செலுத்தினர். முன்னதாக அசோக்கின் வீட்டில் இருந்து பேரணியாக புறப்பட்டு நினை விடம் வந்தடைந்தனர்.
போக்குவரத்து தொழிலாளர்கள்
நெல்லை கரையிருப்பில் சிஐடியு போக்குவரத்து தொழிலாளர் சங்கம் சார்பில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டது. சிஐடியு மாவட்டச் செயலாளர் ஆர்.மோகன், மாநிலக் குழு உறுப்பினர் பெருமாள், மாவட்ட துணைத் தலைவர் எம்.சுட லைராஜ், போக்குவரத்து தொழிலா ளர் சங்க மாவட்டத் தலைவர் காம ராஜ், மாவட்ட பொதுச் செயலாளர் ஜோதி, பொருளாளர் சி.மணி மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி
தூத்துக்குடியில் நடைபெற்ற நிகழ்வில் மாவட்டச் செயலாளர் முத்து தலைமை வகித்தார். மாநகர பொருளாளர் பாலா, வாலிபர் சங்க நிர்வாகிகள் ஜேம்ஸ், மனோஜ், மனோ ஆகியோர் கலந்து கொண்ட னர். கோவில்பட்டியில் தோழர் அசோக் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப் பட்டது. இதில் மாவட்டக்குழு உறுப்பி னர் தினேஷ்குமார் தலைமை வகித் தார். வாலிபர் சங்க மாவட்டத் தலைவர் உமாசங்கர், நகரச் செயலா ளர் ஜெய்லானி கனி, வாலிபர் சங்க நிர்வாகிகள் முத்துக்குமார், சந்தோஷ், சிபிஎம் ஆனந்த் ஆகி யோர் கலந்து கொண்டனர்.
அருமனை
வாலிபர் சங்கம் சார்பில் அரு மனை பகுதிகளில் அவரது படத் திற்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. மாறப்பாடி கிளை பகுதியில் மாவட் டக்குழு உறுப்பினர் ஐய்யப்பன், வட்டாரத் தலைவர் சரவணன், வட்டார நிர்வாகி அபிஷா மற்றும் ஜோஸ் இன்பராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.