tamilnadu

img

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர் தோழர்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர் தோழர் ஆர்.நல்லகண்ணு மறைவிற்கு, கம்பத்தில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் சார்பில் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்பட்டது. கம்பம் காந்தி சிலை முன்பு நடைபெற்ற அஞ்சலி கூட்டத்திற்கு மாநிலக் குழு உறுப்பினர் சிவாஜி தலைமை வகித்தார். கிளைத் தலைவர் சக.முத்துக்கண்ணன், செயலாளர் கௌதம், முரளி, சித்தேந்திரன், ஹிமானா, சத்யன் ஆகியோர் நல்லகண்ணுவின் நினைவுகளைப் பகிர்ந்து உரையாற்றினர். கம்பம் சிபிஎம் ஏரியா கமிட்டி செயலாளர் கே.ஆர்.லெனின் நிறைவுரையாற்றினார்.