tamilnadu

மணிப்பூரில் முழு அடைப்பு போராட்டம்

மணிப்பூரில் முழு அடைப்பு போராட்டம்

குடியரசுத் தலைவர் ஆட்சி நடைபெற்று வரும் மணிப்பூர் மாநிலத்தில் ஆயுதங்களை ஒப்படைப்பதன் மூலம் வன்முறை குறைந்து விட்டதாக வெள்ளிக்கிழமை முதல் அங்கு அரசுப் பேருந்து சேவைகள் தொடங்கப்பட்டன.  மணிப்பூரில் இருந்து தங்களுக்கு தனி நிர்வாகம் ஏற்படுத்தும் வரை பொது போக்கு வரத்தை அனுமதிக்க முடியாது என அறிவித்து குக்கி பழங்குடி சமூகத்தினர் போராட்டம் நடத்தி னர். பல இடங்களில் தடைகளை ஏற்படுத்தினர். இந்த தடைகள் அகற்றப்பட்டு பாதுகாப்பு படை யினரின் பாதுகாப்புடன் பேருந்துகள் இயக்கப் பட்டன. ஆனால் சனிக்கிழமை அன்று பழங்குடி மக்கள் பெரும்பான்மையாக வாழும் மலை மாவட்டங்களில்   பாதுகாப்பு படையினருக்கும், பழங்குடியின மக்களுக்கு மோதல் ஏற்பட்டது. குறிப்பாக காங்கோக்பியில் நடந்த மோதலில் குக்கி பழங்குடியின போராட்டக்காரர் ஒருவர் உயி ரிழந்தார். மேலும் பெண்கள், காவலர்கள் உள்ளிட்ட 40-க்கும் அதிகமானோர் காயமடைந்த னர். பொது பேருந்து சேவை  மற்றும் பழங்குடி யின மக்கள் மீதான தாக்குதலை கண்டித்து குக்கி இன பழங்குடி மக்கள் ஞாயிற்றுக்கிழமை அன்று முழுஅடைப்பு போராட்டம் நடத்தினர். இதனால் மலை மாவட்டங்களில்   இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது.