tamilnadu

img

இயற்கை எழிலை ரசிக்க வாருங்கள் மத்திய பிரதேச சுற்றுலாத்துறை அழைப்பு

இயற்கை எழிலை ரசிக்க வாருங்கள் மத்திய பிரதேச சுற்றுலாத்துறை அழைப்பு

மத்திய பிரதேச மாநிலத்தின் இயற்கை எழிலை காண வருகை தருமாறு அம்மாநில சுற்றுலா வாரியம் தமிழக சுற்றுலாப்பயணி களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.  மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள சுற்றுலாத்தலங்களை தமிழக மக்களிடம் பிரபலப்படுத்தும் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட அம்மாநில சுற்றுலா  வாரியத்தின் நிர்வாக இயக்குநர் ஷியோ சேகர் சுக்லா, மத்திய பிரதேச மாநிலம் சுற்றுலாத்தலம் மட்டுமல்ல வரலாறு கலாச்சாரம் சாகச பயணங்கள் ஆகியவற்றின் சங்கமமாக உள்ளது என்றார், மத்திய பிரதேசத்தை பார்க்க வேண்டும் என்ற ஆர்வம் தமிழக சுற்றுலாப் பயணிகளிடம் அதிகரித்து வருகிறது என்று கூறிய அவர், தமிழக பயணிகளின் மாறு பட்ட சுற்றுலா விருப்பங்களை பூர்த்தி செய்யும் ஒரு வசீகரமான மாநிலமாக மத்திய பிரதேசம் உள்ளது என்று கூறினார். மாநிலத்தில் உள்ள கன்கா மற்றும் பாந்தவ்கர் தேசிய பூங்காக்களில்  வன விலங்கு ஆர்வலர்கள் மெய்சிலிர்க்கும் வகையில்  வனப்பகுதியில் சவாரி செய்யும் வசதி உள்ளது என்றும் புலிகளை இயற்கையான சூழலில் காணமுடியும் என்றும் அவர் தெரிவித்தார். கஜுராஹோ நினைவு சின்னங்கள், பௌத்த தளமான சாஞ்சி ஸ்தூபி, பீம்பேட்காவில் உள்ள  கற்கால பாறை வசிப்பிடங்கள் உள்பட யுனெஸ்கோவால் பட்டியலிடப்பட்ட 18 உலக பாரம்பரிய  தளங்கள் மத்திய பிர தேசத்தில் உள்ளன என்றும் அவர் கூறி னார். கலை, கைவினைப் பொருட்கள் மற்றும் தெருவோர உணவுகள் உள்பட பல்வேறு வகையான உணவுகளை மத்திய பிரதேச சுற்றுலாத்துறை ஊக்குவித்து வருவதாகவும் சைவம், அசைவம் என சிறப்பான உணவு வகைகளும் சுற்றுலாப் பயணிகளுக்கு கிடைக்கும் என்றும் அவர் கூறினார்.