“நிறைந்தது மனம்” நிகழ்ச்சியில் மடிக்கணினி பெற்ற கல்லூரி மாணவர்கள் முதல்வருக்கு நன்றி
திருவாரூர், பிப்.6- சென்னை வர்த்தக மையம் நத்தம்பாக்கத்தில் கல்லூரி மாணவர்களின் திறன் வளர்ச்சி மற்றும் டிஜிட்டல் முன்னேற்ற த்திற்காக 10 லட்சம் மடிக்கணினிகள் வழங்கும் “உலகம் உங்கள் கையில்” என்னும் மாபெரும் திட்டத்தினை தமிழக முதல்வர் ஜன.5 அன்று தொடங்கி வைத்தார். தொடர்ந்து, திருவாரூர் மாவட்டம் திரு.வி.க.கலை கல்லூரியில் முதற்கட்டமாக திரு.வி.க கலை மற்றும் அறிவியல் கல்லூரி, மன்னை இராஜகோபால சுவாமி கல்லூரி, திருவாருர் அரசு மருத்துவ கல்லூரி மற்றும் கூத்தாநல்லூர் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இறுதியாண்டு பயிலும் மாணவர்கள், இணை யதளத்தில் பதிவு செய்துள்ள 3,747 மாணவ ர்களுக்கு மடிக்கணினிகளை திருவாரூர் மாவட்ட ஆட்சியர் வ. மோகன ச்சந்திரன், நாகப்பட்டினம் நாடாளுமன்ற உறுப்பினர் வை.செல்வராஜ், திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி.கே. கலைவாணன் வழங்கினர். கல்லூரி மாணவர்கள் நன்றி “உலகம் உங்கள் கையில்” திட்டத்தில் பயன்பெற்ற திரு.வி.க கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இறுதியாண்டு பயிலும் மாணவி ஒருவர் கூறுகையில், நான் அரசு கல்லூரியில் மீடியா துறை சார்ந்த பட்டப்படிப்பினை படித்து வருகிறேன். இப்படிப்பிற்கு அத்தியாவசியமான ஒன்று மடிக்கணினி. இம்மடிக்கணினி என்னிடம் இல்லாமல் எனது நண்பர்களிடமும், எனது பள்ளி தோழிகளிடமும் வாங்கி என்னுடைய புராஜெக்ட் ஒர்க் செய்து வந்தேன். தக்க சமயத்தில் கல்வியில் முன்னேற்றம் அடைய இந்த திட்டத்தின் கீழ் மடிக்கணினி வழங்கிய முதல்வருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்’’ என்றார். கூத்தாநல்லூர் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இறுதியாண்டு பயிலும் மாணவி பிரியதர்ஷினி கூறுகையில், “நான் பி.சி.ஏ. படித்து கொண்டி ருக்கிறேன். உலகம் உங்கள் கையில் திட்டத்தின் மூலம் மடிக்கணினி வழங்கினார்கள். இந்த மடிக்கணினி எனக்கு ஆன்லைன் வகுப்பு, பாடம் சார்ந்த பயிற்சிகள் மேற்கொள்ளவும், எனது படிப்பு சார்ந்த தகவல்களை சேமித்து வைத்துக்கொள்ள மிகவும் பயனுள்ளதாக உள்ளது. இந்த பயனுள்ள திட்டத்தினை வழங்கிய முதல்வருக்கு நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்’’ என்றார்.
