tamilnadu

img

குடிக்க சுத்தமானத் தண்ணீர் இல்லை கல்லூரி விடுதி மாணவர்கள் ஆட்சியரிடம் மனு

குடிக்க சுத்தமானத் தண்ணீர் இல்லை
 கல்லூரி விடுதி மாணவர்கள் ஆட்சியரிடம் மனு

திருப்பூரில் உள்ள ஆதிதிராவிடர் நல  மாணவர் விடுதியில் குடிக்க சுத்திகரிக்கப் பட்ட குடிநீர் இல்லாததால், சுத்தமான குடிநீர்  வழங்கக் கோரி இந்திய மாணவர் சங்கத்தின்  தலைமையில் மாணவர்கள் மாவட்ட ஆட்சி யரிடம் மனு அளித்தனர். திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவல கத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் திங்களன்று நடைபெற்றது. இதில், இந்திய மாணவர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் பிரவின் குமார் தலைமையில் மாணவர்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது, காங்கேயம் சாலை வேலன் ஹோட்டல் அருகில் உள்ள சிக்கண்ணா கல்லூரி ஆதிதிராவிடர் மாணவர் நல விடுதியில் 50 க்கும் மேற்பட்டோர் தங்கிப் படித்து வருகின்ற னர். இந்நிலையில், இங்கு முறையான சுத்தி கரிக்கப்பட்ட குடிநீர் இல்லை. இதனால் மாண வர்களுக்கு உடல் உபாதைகள் ஏற்படுகிறது.  எனவே மாவட்ட ஆட்சியர் உடனடியாக தலை யிட்டு திருப்பூர் சிக்கண்ணா கல்லூரி ஆதிதி ராவிடர் மாணவர் விடுதியில் சுத்திகரிக் கப்பட்ட குடிநீர் வசதி செய்து தர வேண்டும். அதேபோல பிற்படுத்தப்பட்டோர் மாணவர் விடுதியில் தரமான உணவு வழங்கிட வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளனர். இடிந்து விழும் நிலையில் தொகுப்பு வீடுகள்: உடுமலை வட்டம் எரிசனம்பட்டி கிராமம்  ஏடி காலனி பகுதியை சேர்ந்த பொதுமக்கள்  அளித்த மனுவில் கூறியிருப்பதாவது, ஏடி  காலனி பகுதியில் 250 குடும்பங்கள் கூலி  வேலை செய்து பிழைத்து வருகின்றோம். தற் போது 500க்கும் மேற்பட்டோர் இப்பகுதியில் உள்ளோம். முன்னாள் முதல்வர்கள் எம்ஜி ஆர் மற்றும் கலைஞர் ஆட்சிக் காலத்தில் 35  ஆண்டுகளுக்கு முன்பு தொகுப்பு வீடுகள் கட்டித் தரப்பட்டது. தற்போது அந்த தொகுப்பு  வீடுகள் இடிந்து விழும் நிலையில் உள்ளன.  மேலும், ஒரு வீட்டிற்கு 5 முதல் 10 நபர்கள்  வசித்து வருகின்றோம். மேலும் இறந்த பின்பு  புதைப்பதற்கான சுடுகாடு ஒரு செண்டு நிலத் திற்கும் குறைவாகவே  உள்ளது. எனவே ஆட் சியர் எங்கள் பகுதியில் ஆய்வு மேற் கொண்டு குறைகளின் மீது சிறப்பு கவனம் செலுத்தி உரிய தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. வீட்டுமனை பட்டாவிற்கான இடம் அளந்து தரக் கோரிக்கை: திருப்பூர் மாவட்டம் அவிநாசி தாலுகா  சுள்ளிபாளையம் கிராமத்தைச் சேர்ந்த மக் கள் அளித்திருந்த மனுவில், திருப்பூர் மாவட் டம் அவிநாசி வட்டம் வள்ளிபுரம் கிராமம் பேருந்து நிறுத்தம் அருகில் இருந்த ஓடை புறம்போக்கு நிலத்தில் 10 ஆண்டுகளுக்கு மேலாக 33 அருந்ததியர் தினக் கூலிக் குடும் பங்கள் வசித்து வந்தனர். 2007 ஆம் ஆண்டு  ஆக்கிரமிப்பு என்னும் பெயரில் 32 குடும்பங் கள் அந்த இடத்தில் இருந்து வெளியேற்றப் பட்டார்கள். வருவாய் துறை மூலம் வெளி யேற்றப்பட்ட 32 குடும்பங்களுக்கும் 2007 ஆம்  ஆண்டு அவிநாசி வட்டம் வள்ளிபுரம் கிரா மத்தில் வீட்டுமனை பட்டா வழங்க உத்தரவி டப்பட்டது. ஆனால் 15 ஆண்டு காலமாக  பாதிக்கப்பட்ட 33 குடும்பங்களுக்கு வரு வாய்த்துறை மூலம் பயனாளிகளுக்கு இடத் தினை அளந்து வீட்டுமனைப்பட்டா வழங்க வில்லை. இந்நிலையில் 15 ஆண்டுகளாக அந்த இடத்தில் குடியேறவில்லை எனவும்,   பயனாளிகள் பெயரில் உள்ள பட்டாக்களை ஏன் ரத்து செய்யக்கூடாது என கிராம நிர்வாக  அலுவலர் மூலம் நோட்டீஸ் அளிக்கப்பட்டி ருப்பது அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது. எனவே  வீட்டுமனை பட்டாக்களை ரத்து செய்யும் முயற்சிகளை நிறுத்தி வைக்குமாறும்,  33 குடும்பங்களுக்கும் 15 ஆண்டுகளுக்கு முன்பு  வீட்டுமனை பட்டா வழங்க ஆணை பிறப்பித்த  இடத்தில் முறையாக இடத்தை அளந்து வீட்டு மனை பட்டாக்களை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. ஏலச்சீட்டு நடத்தி மோசடி: அம்மன் நகர் பகுதியைச் சேர்ந்த பொது மக்கள் அளித்துள்ள மனுவில், திருப்பூர் மாவட்டம் பூலுவபட்டி அடுத்த அம்மன் நகர்  பகுதியில் ராஜேஸ்வரன் என்பவர் பழனிச் சாமி நகர் 3 வது விதியில் மளிகை கடை நடத்தி  வசித்து வந்தார். அவர்கள் அப்பகுதியில் ஏல  மற்றும் பலகார சீட்டு நடத்தி வந்தனர். நம்பிக் கையின் பேரில் அப்பகுதியைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர்  அவர்களிடம் வாரம்  மற்றும் மாதத் தவணையில் ஏலம் மற்றும் பல கார சீட்டு சேர்ந்துள்ளனர். இந்நிலையில் பணம் கட்டியவர்களை ஏமாற்றி வீடு மற்றும் கடையை காலி செய்து தலைமறைவாகி விட்டதாகவும், இதுகுறித்து காவல் நிலை யத்தில் புகார் அளித்தும் எந்தவித நடவ டிக்கை எடுக்கப்படவில்லை. எனவே மாவட்ட  ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என  வலியுறுத்தி உள்ளனர்.  அதேபோல, திருப்பூர் மாவட்டம் ஊத் துக்குளி வட்டம் வெள்ளிரவெளி கிரா மத்தைச் சேர்ந்த கண்ணம்மாள் மற்றும் தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்ட பய னாளிகள் அளித்த மனுவில், திருப்பூர் மாவட் டம் ஊத்துக்குளி வட்டம் வெள்ளிரவெளி கிரா மத்தில் தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத் தின் பயனாளிகளாக நாங்கள் உள்ளோம். இந் நிலையில் கடந்த 4 மாதங்களாக எங்கள் அனைவருக்கும் ஊரக வேலை வாய்ப்பு திட் டத்தில் பணியாற்றியதற்கான ஊதியம் வழங் கப்படவில்லை. இதனால் எங்கள் வாழ்வாதா ரம் பாதிக்கப்படுகிறது. எனவே உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட் டுள்ளது.