கோவை பதிப்பு தீக்கதிர் அலுவலக கட்டிட நிதி வழங்கல்
சேலம் மேற்கு மாநகர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரியாக்கவுண்டம்பட்டி, ஜங்சன் நகர் கிளைகள் சார்பில் தீக்கதிர் கோவை பதிப்பு அலுவலக கட்டிட நிதியாக ரூ.25 ஆயிரத்தை ஜங்சன் கிளை சார்பில் செயலாளர் ஏ.முகமது அலி வழங்கினார். மேற்கு மாநகர கமிட்டி உறுப்பினர் பி.பாலகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர்
எஸ்.முத்துக்கண்ணன், கட்சி அலுவலக செயலாளர் பி.சந்திரன், மேற்கு மாநகர செயலாளர் பி.கணேசன், மேற்கு மாநகர கமிட்டி உறுப்பினர் எம்.கனகராஜ் ஆகியோர் பங்கேற்றனர்.
