மதுரை, மே. 22- மத்திய பா.ஜ.க அரசின் மக்கள் விரோத, தொழி லாளர் விரோத கொள்கைக ளைக் கண்டித்து கூட்டுறவு சங்க ஊழியர்கள் சார்பில் மதுரை ஆவின் முன்பு சிஐடியு, எல்பிஎப் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. எல்பிஎப் மாவட்டத் தலைவர் பிச்சை தலைமை தாங்கினார். இதில் சிஐடியு தமிழக கூட்டுறவு சங்க ஊழியர் சங்க பொதுச் செயலாளர் இரா.லெனின், தலைவர் ஜி.எஸ். அமர்நாத், பொருளாளர் எம் .துரைசாமி, ஆவின் கிளைச் செயலாளர் பி.கே. செல்வராஜ், தலைவர் ரமேஷ் பாபு, பொருளாளர் எஸ் .முருகேசன் உள்ளிட் டோர் கலந்து கொண்டனர்.