tamilnadu

img

துப்புரவு பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

இராஜபாளையம், மே 15-  துப்புரவு தொழிலாளர்கள் தங்களுக்கு பாதுகாப்பான உப கரணங்கள் வழங்கப்பட வேண் டும், சிறப்பு ஊதியம் வழங்கப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட பல் வேறு கோரிக்கைகளை முன் வைத்து தமிழகம் முழுவதும் சிஐ டியு தலைமையில் ஆர்ப்பாட்டங் களை நடத்தி வருகின்றனர். இராஜபாளையத்தில் வியா ழக்கிழமை காலை ஆவாரம்பட்டி 1 மற்றும் 2 வது டிவிசன் சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது ஆர்ப்பாட்டத்திற்கு ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழி யர்கள் சங்கத்தின் கிளை நிர்வாகி முத்தையா தலைமை தாங்கினார். நகர கன்வீனர் சுப்பிரமணியன் கோரிக்கைகளை விளக்கி பேசி னார். ஸ்ரீவில்லிபுத்தூர் பேருந்து நிலையத்தில் துப்புரவு தொழிலா ளர்களின் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு ஜெயக்குமார் தலைமை தாங்கி னார் சிஐடியு நகர கன்வீனர் வீர சதானந்தன் கோரிக்கைகளை விளக்கி பேசினார்.