கோவை, ஆக.10- கோவை மாநகராட்சி நிர்வாகத் தின் அலட்சியம் காரணமாக தூய்மை பணியாளர்கள், எவ்வித பாதுகாப்பு உபகரணங்களும் இன்றி சாக்கடைக் கழிவுகளை வெறும் கைகளால் அகற்றும் அவலம் நீடித்து வருகிறது. மனித கழிவுகளை மனிதர்கள் அகற்ற தடை செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், கோவை மாநகராட்சி பகுதிகளில் எவ்வித பாதுகாப்பு உபக ரணங்களும் இன்றி தொடர்ந்து சாக் கடை, பாதாள சாக்கடை உள்ளிட்ட வற்றில் ஊழியர்கள் பணி செய்ய நிர்பந்திக்கப்படுகின்றனர். கடந்த சில மாதங்களில் மட்டும் கழிவுநீர் தொட்டி யில் இறங்கி சுத்தம் செய்த பத்துக் கும் மேற்பட்டோர் விஷவாயு தாக்கி மரணமடைந்துள்ளனர். இதுபோன்ற மரணங்கள் நிகழும்போது அரசு நிர்வா கம் சுறுசுறுப்பாக செயல்படுவது போல் காட்டிக்கொண்டாலும், உண் மையில் தூய்மை பணியாளர்களின் மீதான அக்கறை ஏதுமில்லாத நிலையே நீடிக்கிறது. இதுபோக சாக் கடைகளை சுத்தம் செய்ய நவீன ரோபோக்களை கோவை மாநகராட்சி வாங்கியிருப்பதாக கூறிக்கொண்டா லும், அது வெறும் காட்சிப் பொருளாக மட்டுமே வைக்கப்பட்டுள்ளது.
இத னால், கோவை மாநகராட்சியில் கழிவு களை அகற்ற பாதுகாப்பு உபகரணங் கள் இன்றி தூய்மை பணியாளர்கள் பணி செய்யும் அவலம் தொடர்ந்து நிலவி வருகிறது. இந்நிலையில், திங்களன்று கோவை மாநகரத்தின் மையப் பகுதி யான சாய்பாபா காலனி அருகேயுள்ள என்.எஸ்.ஆர். சாலையில் 4 தற்காலிக தூய்மை பணியாளர்கள் எவ்வித பாது காப்பு உபகரணங்களும் இன்றி சாக்க டையில் துப்புரவு பணிகளை செய்து வந்தனர். இதனைக்கண்டு அதிர்ச்சிய டைந்த வழக்கறிஞர் ஒருவர் அப்பணி களை தடுத்து நிறுத்தி பாதுகாப்பு உப கரணங்கள் இன்றி பணி செய்யக்கூ டாது என அறிவுறுத்தினார். மேலும் இதுதொடர்பாக கோவை மாவட்ட ஆட்சியரிடமும் புகார் தெரிவித்தார்.