12-ஆம் வகுப்பு அரசுப் பொதுத் தோ்வு தொடங்கியது 8 லட்சத்து 21 ஆயிரம் மாணவர்கள் பங்கேற்றனர்
தமிழ்நாடு முழுவதும் மாநில பாடத் திட்டத்தின் கீழ் உள்ள பள்ளி களில் 12 ஆம் வகுப்பு மாணவர் களுக்கான அரசுப் பொதுத்தேர்வு திங்கட்கிழமை (மார்ச் 3) தொடங்கியது. முதல் நாளில் தமிழ் உள்ளிட்ட மொழிப் பாடங்களுக்கான தேர்வு நடைபெற்றது. இந்தத் தேர்வை 3,316 தேர்வு மையங்களில் 8 லட்சத்து 21 ஆயிரத்து 057 பேர் எழுதினர். இவா்களில் 7 ஆயிரத்து 518 பள்ளி களைச் சேர்ந்த 8 லட்சத்து 2 ஆயிரத்து 568 மாணவர்கள், 18 ஆயிரத்து 344 தனித் தேர்வர்கள் மற்றும் 145 சிறைவாசிகள் அடங்குவர். கணினியில் தேர்வு எழுதிய பார்வை மாற்றுத்திறனாளி மாற்றுத்திறனாளிகளுக்கு துறை மூலம் அரசு மருத்துவமனை சான்றி தழ் பெற்று, அதன் அடிப்படையில் ஸ்க்ரைப் மூலம் தேர்வு எழுத ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதன்படி, 5,606 மாற்றுத்திறனாளி மாண வர்கள் பொதுத் தேர்வு எழுதினர். 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வை பார்வை மாற்றுத்திற னாளி மாணவரான எம். ஆனந்தன் முதல் முறையாக கணினி வழியாக எழுதினார். இதற்காக, திருவள்ளு வர் அண்ணா மேல்நிலைப் பள்ளி சிறப்பு மையத்தில் இதற்கான சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. நல்லா எழுதுங்க: அமைச்சர் வாழ்த்து 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு கள் திங்களன்று துவங்கிய நிலை யில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, நாகப்பட்டினம் நகராட்சியில் உள்ள நடராஜன் தமயந்தி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், பொதுத்தேர்வு ஏற்பாடுகளை பார்வையிட்டார். தேர்வெழுதும் மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்த அவர், “குட்மார்னிங்.. டென்ஷன் இல்லாமல் எழுத வேண்டும். என்ன படித்தீர்களோ அதைத் தான் கேட்கப்போகிறார்கள்... பதட்ட மில்லாமல் ஹாப்பியா எழுதுங்கள். முதலமைச்சரும் அதைத்தான் சொல்லி இருக்கிறார்கள். உற்சாக மாக எழுதுங்கள்.. நல்லா எழுதுங்க.. ஆல் தி பெஸ்ட்” என்று வாழ்த்தி