tamilnadu

img

சினிமா விமர்சனம் எக்கோ (eko) - விடுதலை விழைவு!

சினிமா விமர்சனம்  

எக்கோ (eko) - விடுதலை விழைவு!

எக்கோ (eko) திரைப்படத்தை நெட்பிளிக்ஸில்தான் பார்க்க முடிந்தது. தியேட்டரில் பார்த்திருந்தால் காடு, மலை, ஓடை,  என இயற்கையின் தரிசனம் இன்னும் கூடுதலான அனுபவத்தை அளித்திருக்கும். கிஷ்கிந்தா படத்தை இயக்கிய தின்ஜித் அய்யாத் தன் இயக்கியிருக்கும் படம். நுகர்பவருக்கு இயங்க இட மளிப்பதே சிறந்த கலைப் படைப்புக்குரிய குணம். எக்கோ படமும் அப்படிதான். இந்தப் படத்தின் மையப்  பாத்திரம் குரியச்சன் . ஆனால் குரியச்சன் படத்தில் வரு வது பத்தோ பதினைந்தோ நிமிடங்கள் மட்டுமே.  அவனது முன்னாள் நண்பன், நேவிக்காரன், போலீஸ்காரர்கள், இப்படி படம் முழுவதும் பலரும் குரியச்சனைத் தேடுகிறார்கள். இந்தக் குரியச்சன் எங்கே தான்  இருக்கிறான்?  நாமும் தேட ஆரம்பிக்கிறோம்.  இரண்டாம் உலகப்போர் சமயம்.  உயர்ரக நாய்களைப் பழக்குவது, விற்பனை செய்வ தைத் தொழிலாகக் கொண்டவன் குரியச்சன் (சௌரப்  சச்தேவா) . தன் நண்பன் மோகன் போத்தனோடு (வினித்)  மலேசியா செல்கிறான். அங்கு குரியச்சனைப் போலவே நாய்களைப் பழக்குவதில் மாஸ்டரான யோசியாவைச் சந்திக்கிறான். யோசியாவின் மனைவி மலாத்தி.  தன்னைவிட சிறந்த முறையில் நாய்களுக்கு பயிற்சி  அளிக்கும் யோசியாவால் குரியச்சன் ஈகோ பாதிக்கப்படு கிறது. யோசியா இறந்ததாக நம்பவைத்து மலாத்தியை கேரளா அழைத்து வருகிறான் குரியச்சன்.  பெண் பித்து, சுயநலம், ஈகோ , துரோகம் நிறைந்த குரி யச்சனுக்குப் பாதுகாப்பில்லை. அவனால் பாதிக்கப்பட்ட வர்கள், போலீஸ் என ஆளாளுக்கு குரியச்சனைத் தேடு கிறார்கள். இதனால் மலைகளில் இருக்கும் குகைகளில்  ஒளிந்து வாழ்கிறான் .  மலாத்தியைப்  பாதுகாக்கத்  தன்னால் பழக்கப்பட்ட  நாய்களையும் பியூஷையும் ( சந்தீப் பிரதீப்) பயன் படுத்துகிறான் குரியச்சன்.  எக்கோ படம் தன் பார்வையாளரை தொடர்ந்து சிந்திக்க வைத்தபடி நகர்கிறது.  மலாத்தியைப் பாதுகாக்க அவளது முதல் கண வனும் குரியச்சனும் நாய்களைப் பயன்படுத்து கிறார்கள். உண்மையில் இவர்கள் அவளைப் பாது காக்கவில்லை. அவளை கட்டுப்படுத்துகிறார்கள். அவ ளது வெளியைக் குறுக்குகிறார்கள். அவளது விடு தலையான வாழ்வை  நாசம் செய்கிறார்கள்.  நாய்களின் வேலையும் மனிதர்களைப் பாதுகாப்ப தில்லை. மனிதன் தன் சுயநலத்துக்காக நாய்களை  கூண்டில் அடைக்கிறான். சங்கிலியால் கட்டிப்போடு கிறான். அதன் இயல்பான வாழ்வில் குறுக்கீட்டை நிகழ்த்தி, அதன் இருப்பை பொருளற்றதாக மாற்று கிறான்.  மாஸ்டராக இருப்பதில் சுகம் காண்கிறார்கள் யோசியாவும் குரியச்சனும். மாஸ்டர் என்பவர் ஒரு துறையில் விற்பன்னர் மட்டுமல்லர்.  மற்றவர்களைக் கட்டுப்படுத்துபவரும் மாஸ்டர் என்றே அழைக்கப்படுகிறார்கள்.  அடிமைகளை வழி நடத்துபவரும் மாஸ்டர் தாம்.  மாஸ்டர் ஓர் ஆண்பால். பெண்ணை, நாயை, காட்டை, புத்திசாலித்தனமாகத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாக நினைக்கிறான் குரியச்சன். அல்லது, அப்படி ஒரு சித்திரத்தை மற்றவர்  களிடம் உருவாக்குகிறான். ஆனால் உண்மை நிலை  என்ன?  ‘எப்போதும் நாய்களுக்கு ஒரே மாஸ்டர்தான்.‘ இறுதியில் பியூஷிடம் கூறுகிறாள் மலாத்தி.  இப்போது, அவன் பழக்கிய நாய்களுக்கு மாஸ்டர்  மலாத்தி. தனது முன்வினைப் பயனால் குகைகளில் ஒளிந்து இருக்கிறான் குரியச்சன். அவனால் வெளியே  வரமுடியாது. அவனை நாய்களும் மலாத்தியும் கட்டுப்  படுத்தியிருக்கின்றனர். சகமனிதர்களை அடிமைகளாக வைத்தி ருப்பவர்களால் சுதந்திரமாக வாழ முடியாது. இயற்கை யைக் கட்டுப்படுத்த  மனிதர்கள் முயலும்போது அது பூமராங் ஆகிவிடுகிறது.  மலாத்தியை சிறை வைத்திருப்பது குரியச்சன் அல்லன். அவள்தான் அவனை சிறை வைத்திருக்கிறாள் என்பதை அறியும்போது மலாத்தியைக் கொல்ல கத்தியை எடுக்கிறான் பியூஷ். அவனை நாய்கள் சுற்றி  வளைக்கின்றன.  பெண்களை, நாய்களை , வெகுகாலம் தளையில் பூட்டி வைக்க முடியாது. எப்போதும் அவர்கள் நன்றிக்கு  உரியவர்களாக இருப்பார்கள் என்று எதிர்பார்க்கக் கூடாது!   அச்சமூட்டுகிறார்கள் தின்ஜித் அய்யாத்தனும் பஹுல் ரமேஷும்.  படம் பார்ப்பவர்கள் இறுதியாக குரியச்ச னைக் கண்டுபிடிக்கிறார்கள். அது வேறு யாரு மில்லை. நாம்தான். நாம் விடுதலையை அனுபவிக்க  வேண்டுமெனில், மற்றவர்களைக் கட்டுப்படுத்தக் கூடாது. சாதியின் பெயரால்,  மதத்தின் பெயரால்,  பாலினத்தின் பெயரால் மற்றவர்களைக் கட்டுப்படுத்தும்  யாராலும் சுதந்திரமாக வாழ முடியாது!  எனும் எதிரொலி யே எக்கோ.