முதலிடத்தில் சீனா...
உலகின் தலைசிறந்த பல்கலைக்கழகங்களின் பட்டியலை நெதர்லாந்தின் லைடன் வெளியிட்டிருக்கிறது. எப்போது பார்த்தாலும், அமெரிக்க, ஐரோப்பியப் பல்கலைக்கழகங்கள்தான் இந்தப்பட்டியலில் அதிக இடங்களைப் பிடிக்கும். தற்போதைய பட்டியலில் முதல் 25 இடங்களில் 19 இடங்களை சீனப் பல்கலைக்கழகங்கள்தான் பிடித்துள்ளன. செஜியாங் முதலிடத்தையும், சாங்காய் இரண்டாவது இடத்தையும் எட்டியிருக்கின்றன. அமெரிக்க டாலர் மதிப்பில் 800 பில்லியன் டாலரை கல்விக்காக சீனா ஒதுக்குகிறது. இத்தனைக்கும் அமெரிக்கா சீனாவை விட அதிகமாகவே ஒதுக்குகிறது. அதில் அந்நாட்டின் மாகாண அரசுகள்தான் அதிகமாகப் பங்களிப்பு செய்கின்றன. இந்தியா ஒதுக்கும் நிதியின் மதிப்போ வெறும் 12 பில்லியன் டாலர்தான்.
‘கடவுளை’ மிஞ்சிய ‘ராஜா’...
“அவ்வளவுதான்.. இவருடைய காலம் முடிந்துவிட்டது” என்று “ராஜா” விராட் கோலி பற்றி இந்தியக் கிரிக்கெட் “ஆட்சியாளர்கள்” நினைத்தனர். டெஸ்ட் மற்றும் சர்வதேச டுவென்டி20 ஆட்டங்களில் இருந்து அவரை விலகச் செய்தனர். கடைசியாக ஒருநாள் போட்டிகளில் வாய்ப்புகளைக் கொடுத்துவிட்டு, அதிலிருந்து அவரை விலக்கி விடலாம் என்றிருந்தனர். அவர்களுக்கு தொடர் அதிர்ச்சியை “ராஜா” கொடுத்து வருகிறார். “கடவுள்” என்ற அடைமொழி தரப்பட்டுள்ள சச்சின் டெண்டுல்கரின் ஒருநாள் சாதனையை முறியடித்து முன்னேறுகிறார். இதுவரையில் 311 ஆட்டங்களில் விளையாடி 54 சதங்களை ஒருநாள் போட்டிகளில் பெற்றிருக்கிறார். “கடவுளோ” 49 சதங்கள் அடித்துள்ளார். அதுவும் 463 ஆட்டங்களில் விளையாடி இதைப் பெற்றார்.
முகமூடித் தீவு உலகிலேயே ஒரு
ஆற்றுக்கு நடுவில் இருக்கும் தீவுகளில் பெரியது என்று பெருமை பெற்றிருக்கும் மயூலி(Majuli) தீவு, இந்தியாவில் அசாம் மாநித்தில்தான் உள்ளது. ஆழமான நதிகளில் ஒன்று என்று சொல்லப்படும் பிரம்மபுத்திராவில் இது இருக்கிறது. 2016 ஆம் ஆண்டில் தனி மாவட்டமாகவும் அறிவிக்கப்பட்டது. இங்குள்ள பழங்குடியினர் தயாரிக்கும் முகமூடிகள் உலகப் புகழ் பெற்றவையாகும்.
