16ஆம் ஆண்டில் தடம்பதிக்கும் அண்ணா நூற்றாண்டு நூலகம்
சென்னை, செப். 15 - சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகம் 15 ஆண்டுகால வெற்றிகரமான பயணத்தை நிறைவு செய்து 16ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. 2010ஆம் ஆண்டு செப்டம்பர் 15ஆம் தேதி அப்போதைய முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியால் சென்னை கோட்டூர் புரத்தில் நிறுவப்பட்ட இந்த நூலகம், அறிஞர் அண்ணாவின் நூற்றாண்டு விழாவைக் கொண்டாடும் வகையில் உருவாக்கப்பட்டது. இந்த நூலகம் 9 தளங்களில் பரவியுள்ளது. இலக்கியப் பிரிவு, போட்டித் தேர்வுகள் பிரிவு, புத்தக வெளியீட்டு அரங்குகள், பார்வையற்றோருக்கான பிரெய்லி பிரிவு மற்றும் செந்தமிழ் சிற்பிகள் அரங்கம் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்ததன்படி, கடந்த 15 ஆண்டுகளில் ஏராளமான இளை ஞர்களின் வாழ்க்கையை உயர்த்திய ஏணி யாக அண்ணா நூற்றாண்டு நூலகம் திகழ்கிறது. மாணவர்களுக்கு கல்வி ஆதார மையமாகவும், குழந்தைகளுக்கு வாசிப்பு அறிமுக வழிகாட்டியாகவும், குடும்பங்களுக்கு பொழுதுபோக்குத் தளமாகவும் செயல்பட்டு வருகிறது. 16ஆம் ஆண்டில் நுழையும் இந்த வேளை யில், நூலகத்தை நவீன அறிவு மையமாக மாற்றும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. 1,200 இருக்கைகள் கொண்ட அரங்கம் மற்றும் திறந்தவெளி திரையரங்கம் புதுப்பிக்கப்படுகின்றன. அறிவியல் பூங்கா, நவீன உணவக வசதி கள், குழந்தைகளுக்கான மேம்படுத்தப்பட்ட வாசிப்புப் பகுதி, புதிய வாசகர் அடை யாள அட்டைகள், கியூஆர் கோடு வசதி, வலைதள முன்பதிவு வசதி மற்றும் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்ப வசதிகள் ஆகியவை அறிமுகப்படுத்தப்படுகின்றன.