tamilnadu

img

அரசுப் பள்ளிகளுக்குப் பாராட்டுச் சான்றிதழ்!

அரசுப் பள்ளிகளுக்குப் பாராட்டுச் சான்றிதழ்!

அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவிப்பு

சென்னை, ஏப்.25 - தமிழ்நாட்டில் 10, 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் 100 விழுக்காடு தேர்ச்சி பெறும் அரசு பள்ளிகளுக்கும் 100 விழுக்காடு தேர்ச்சி வழங்கும் அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும் என பேரவையில் அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவித்தார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் பள்ளிக் கல்வித்துறை மானியக் கோரிக் கைகள் மீதான விவாதங்களுக்கு பதி லளித்து பேசிய அமைச்சர் அன்பில் மகேஸ் பின்னர் புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். அரசுப் பள்ளிகளில் 6 முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலும் 13 லட்சம் மாணவர்களுக்கு தமிழ், ஆங்கிலம் மற்றும் கணிதத் திறன்களை மேம்ப டுத்தும் வகையில் திறன் என்னும் முனைப்பு இயக்கம் ரூ.19 கோடியில்  மேற்கொள்ளப்படும். பள்ளி நூலகங் கள் வாயிலாக மாணவர்களின் அறிவுத் தேடல் மற்றும் வாசிப்புத் திறன்கள் மேம்படுத்தப்படும். குழந்தைநேய திறன்மிகு  வகுப்பறைக்கு ரூ. 25 கோடியில் தளவாடப் பொருட்கள் வழங்கப்படும். புதிதாக 13 தொடக்கப் பள்ளி கள் தொடங்கப்படும் மற்றும் 38 பள்ளி கள் தரம் உயர்த்தப்படும். அரசுப் பள்ளியில் பயின்று சாதனை புரிந்த மாணவர்கள், அவர் கள் பயின்ற பள்ளியின் தூதுவர்களாக நியமிக்கப்படுவார்கள். மாணவர் சேர்க்கையை அதிகரிக்கும் அரசுப் பள்ளிகளுக்குப் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும். ஆசிரியர்களின் வகுப் பறைப் பயன்பாட்டிற்கு கைப்பிரதி பாட நூல் வழங்கப்படும். கலைத் திட்டம், பாடத்திட்டம்  மற்றும் பாட நூல்கள் மாற்றியமைக்கப் படும். கோடை சிறப்பு முகாம் கலைத் திருவிழா போட்டிகள்  மாநில அளவில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு “கலைச் சிற்பி” என்ற தலைப்பில் கோடைக்கால  சிறப்பு முகாம் நடத்தப்படும். அரசுப் பள்ளி மாற்றுத்திறன் மாணவர்களின் உடல்நலம் மற்றும் மனநலத்தை மேம்படுத்த தகுந்த விளையாட்டுச் சாதனங்கள் வழங்கப் படும்; பயிற்சிகள் அளிக்கப்படும். தொழிற்பயிற்சி நிலைய ஆய்வகங்கள்  வழியாக 12 ஆயிரம் மாணவர்களுக்கு ரூ.13 கோடி மதிப்பீட்டில் திறன் பயிற்சி அளிக்கப்படும். 10 மற்றும் 12 ஆம் வகுப்பு  பொதுத் தேர்வுகளில் 100 விழுக்காடு  தேர்ச்சி பெறும் அரசுப் பள்ளிகளுக் கும், 100 விழுக்காடு தேர்ச்சி வழங்கும் அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும். சர்வதேச, தேசிய மற்றும் மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற தனியார் சுயநிதிப் பள்ளி மாணவர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் மற்றும் கேடயம் ரூ. 4.60 லட்சத்தில் வழங்கப்படும். ஆசிரியர்களுக்கு திறன் பயிற்சி மாணவர்களின் கற்றல் விளைவுகளை மேம்படுத்திட ஒரு  லட்சத்து 25 ஆயிரம் ஆசிரியர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப் படும். தனியார் சுயநிதி மற்றும் பிற வாரி யப் பள்ளிகளில் பணிபுரியும் தமிழா சிரியர்களுக்கு ரூ.4.94 லட்சத்தில் பயிற்சி வழங்கப்படும். தனியார் சுயநிதிப் பள்ளி களில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர் களுக்கு போக்சோ சட்டம் குறித்த விழிப் புணர்வு பயிற்சி ரூ.4.94 லட்சம் மதிப் பீட்டில் வழங்கப்படும். கவிதைகள் மொழிபெயர்ப்பு பாரதியார் மற்றும் பாரதி தாசன் கவிதைகள் ரூ.1 கோடி மதிப்பீட் டில் மொழிபெயர்க்கப்படும். மூத்த வரலாற்று அறிஞர் களின் அரிய தமிழ்நாட்டு வரலாற்று நூல்கள் ரூ.30 லட்சத்தில் வெளியிடப் படும். அரசின் துறைத் தேர்வுகளுக் கான நூல்கள் ரூ.50 லட்சத்தில் வழங்கப்படும். பெரியார் குறித்த இலக்கியப்  பதிவுகள் ரூ.50 லட்சத்தில் தொகுப்பாக  வெளியிடப்படும். அண்ணா நூற்றாண்டு  நூலகத்தில் ரூ. 3 கோடியில் கருத்த ரங்க கூடம் அமைக்கப்படும். நூலகக் கட்டிடங்கள் ரூ.30  கோடியில் மறுகட்டமைப்பு செய்யப்படும்.