அஜித்குமார் சட்டவிரோத காவல் மரண வழக்கு ஆக.20-க்குள் விசாரணையை சிபிஐ முடிக்க வேண்டும்!
உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு
மதுரை, ஜூலை 8 - அஜித்குமார் மரணம் தொடர்பான விசாரணையின் இறுதி அறிக்கையை ஆகஸ்ட் 20-ஆம் தேதி தாக்கல் செய்ய வேண்டும் என சிபிஐக்கு உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவில் தற்காலிக ஊழியர் அஜித்குமாரின் சட்டவிரோத காவல் மரணம் தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஏராள மான வழக்குகள் தாக்கல் செய்யப் பட்டிருந்தன. அஜித்குமார் வழக்கில் சிபிஐ விசாரணை கூடாது என்றும், அஜித் குமாரின் தாயாருக்கு நிவாரண நிதி வழங்கப்பட வேண்டும்; சாட்சிகளுக்கு பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும்; நகை காணாமல் போனதாக நிகிதா புகார் கொடுத்த வழக்கையும் சிபிஐக்கு மாற்ற வேண்டும் என்றும் தனித்தனியாக பலர் பொதுநல மனுக்களைத் தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்குகள் நீதிபதிகள் எஸ்.எம். சுப்பிரமணியம், மரிய கிளாட் அமர்வு முன்பாக செவ்வாயன்று விசாரணைக்கு வந்தன. அப்போது, அஜித்குமார் மரணம் தொடர்பாக விசாரணை நடத்திவந்த கூடுதல் மாவட்ட நீதிபதி ஜான் சுந்தரலால் சுரேஷ் மற்றும் அரசுத் தரப்பில் அறிக்கை கள் தாக்கல் செய்யப்பட்டன. இவை அனைத்தையும் விசாரித்த நீதிபதிகள், “மாவட்ட நீதிபதி விரிவான அறிக்கையைத் தாக்கல் செய்திருக் கிறார். அதில், அஜித்தின் சட்டவிரோத காவல் மரணத்தில் விதிமீறல்கள் இருப்ப தும், குற்றம் நடந்ததற்கான முகாந்திரம் இருப்பதும் தெரியவருகிறது” என்று தெரி வித்தனர். “மாவட்ட கூடுதல் நீதிபதி பாதி விசார ணையை முடித்துவிட்ட நிலையில், மீதி விசாரணையை சிபிஐ முடிக்கும். அரசே வழக்கை சிபிஐ-க்கு மாற்றியுள்ளது. இந்த வழக்கை வேறு விசாரணை அமைப்புக்கு மாற்றினாலும், அது சரியாக நடக்காது என்ற குற்றச்சாட்டை முன்வைக்க வாய்ப்புள்ளதால் வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டாம் என கூறு வது சரியாக இருக்காது; சிபிஐ விசார ணையை உயர் நீதிமன்றம் கண் காணிக்கும்” என்றனர். “மாவட்ட நீதிபதி அறிக்கையின் அடிப்படையில், முக்கிய சாட்சிகள் அழிக்கப்படவில்லை என தெரியவருவ தால், இந்த அறிக்கை விசாரணைக்கு பெரிதும் உதவும் என்பதில் சந்தேக மில்லை. மனுதாரர்கள் தரப்பில் இந்த வழக்கு தொடர்பான அனைத்து வழக்கு களையும் சிபிஐக்கு மாற்றக் கோரியுள்ள னர். விசாரணை முழுமையடைய அந்த வழக்கையும் சிபிஐ-க்கு மாற்ற வேண்டும்” என்றனர். நிறைவாக, “அஜித் குமாரின் மரண வழக்கை விசாரிப்பதற்கான அலுவலர் களை சிபிஐ இயக்குநர் ஒரு வாரத்தில் நிய மிக்க வேண்டும். நியமிக்கப்படும் அலு வலர்கள், மதுரை அமர்வின் நீதிமன்ற பதி வாளர் வழியே, மாவட்ட கூடுதல் நீதிபதி யின் விசாரணை அறிக்கை மற்றும் அவ ரது கட்டுப்பாட்டில் இருக்கும் சாட்சிகள், ஆவணங்களை பெற்றுக் கொள்ள வேண்டும். எந்த தாமதமுமின்றி விசார ணை முறையாக நடைபெற வேண்டும். அனைத்து தரப்பிலும் விரிவாக விசார ணையை மேற்கொண்டு, இறுதி அறிக் கையை சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் ஆகஸ்ட் 20ல் தாக்கல் செய்ய வேண்டும்” என்று உத்தரவிட்டனர். சாட்சிகளுக்கு போதிய பாதுகாப்பு வழங்கப்படுவதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என்ற நீதிபதிகள், அஜித்குமாரின் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்குவது குறித்து அரசு பதிலளிக்க வேண்டும் என்றும் உத்தரவில் குறிப்பிட்டனர்.