சாதிவாரிக் கணக்கெடுப்பு அறிவிப்பு; இந்தியா கூட்டணிக்கு கிடைத்த வெற்றி!
முதலமைச்சர் ஸ்டாலின் கருத்து
சென்னை, மே 1 - “மக்கள்தொகை கணக்கெடுப் பின் ஒரு பகுதியாக சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தப்படும் என ஒன்றிய அரசு அறிவித்திருப்பது திமுக மற்றும் இந்தியா கூட்டணிக்கு கிடைத்த வெற்றி!” என திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து, அவர் தமது ‘எக்ஸ்’ சமூகவலைத்தளப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். “மிகவும் அவசிய தேவையாக, சாதிவாரிக் கணக்கெடுப்பு கோரிக்கை பலமுறை வலியுறுத்தப் பட்டும் அதற்கு மறுப்பு தெரிவிக்கப் பட்டது. இறுதியாக ஒன்றிய பாஜக அரசு வரவிருக்கும் மக்கள்தொகை கணக்கெடுப்பின்போது, சாதிவாரி கணக்கெடுப்பும் நடத்தப்படும் என்று அறிவித்திருக்கிறது. ஆனால், இதில் எப்போது மக்கள்தொகை கணக்கெடுப்பு நடைபெறும்? எப்போது அது முடிவுறும் என்பது போன்ற மிகமுக்கியமான கேள்வி களுக்கு இன்னும் விடை கிடைத்தபாடில்லை. சாதிவாரி கணக் கெடுப்பு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்ட தரு ணம் என்பது தற்செயல் நிகழ்வல்ல. பீகார் சட்டப் பேரவைத் தேர்தலில் சமூகநீதி ஆதிக்கம் செலுத்தும் நிலையில், பாஜக அரசின் இந்த அதிரடி முடிவு, அரசியல் நலனுக்காக மேற் கொள்ளப்படுகிறது என்பது தெளி வாகத் தெரிகிறது. சாதி ரீதியாக மக்களை எதிர்க்கட்சிகள் பிளவுபடுத்து கின்றன என்று குற்றம் சாட்டியதுடன் எதிர்க்கட்சிகளை அடிக்கடி மோச மாக விமர்சித்த பிரதமர் நரேந்திர மோடி, இந்த மிக முக்கியமான கோரிக்கைக்கு பணிந்திருக்கிறார். சாதிவாரிக் கணக்கெடுப்பு என்பது கொள்கைகளை உரு வாக்குவதற்கு, இலக்கு டன் கூடிய நலத்திட்டங் களை மேற்கொள்வ தற்கு, உண்மையான சமூக நீதியை அடை வதற்கு தேவையான ஒன்று. இது விருப்பமான ஒன்றல்ல. முதலில் அதன் அளவை தெரிந்து கொள்ளாமல், சமூக அநீதிக்கு தீர்வு காண முடியாது. தமிழ்நாடு அரசு, திமுகவை பொறுத்தவரை, இது கடின மான முயற்சிக்கு கிடைத்த வெற்றி யாகும். சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று நாம்தான் முதன்முதலில் சட்டப்பேரவையில் தீர்மானத்தை நிறைவேற்றினோம். ஒவ்வொரு அமைப்பிலும் இந்த காரணத்தை நாம் முன்னெடுத்தோம். பிரதமரை ஒவ்வொரு முறை சந்திக்கும்போதும், அவருக்கு பல்வேறு கடிதங்கள் எழுதியும் இந்த கோரிக்கையை நாம் வலியுறுத்தினோம். பிற கட்சிகளோ, மாநில அரசே சாதி வாரி கணக்கெடுப்பை நடத்தலாம் என்று கூறின. ஆனால், மக்கள்தொகை கணக்கெடுப்பு என்பது ஒன்றிய அரசின் பணி என்பதில் நாம் உறுதியாக இருந்தோம். மக்கள் தொகை சட்டத்தின் கீழ் சட்டப்பூர்வமான சாதிவாரி கணக்கெடுப்பை ஒன்றிய அரசு மட்டுமே மேற்கொள்ள முடியும். இப்போது தமிழ்நாடு அரசின் நிலைப்பாடு உறுதி செய்யப்பட்டுள்ளது. திமுக மற்றும் இந்தியா கூட்டணியின் சமூக நீதிப் பயணத்தில் நமது கடினமான முயற்சிக்கு கிடைத்த இன்னொரு வெற்றியாகும்.” இவ்வாறு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.