அசாம், கேரளம், புதுச்சேரியில் இன்றுடன் பிரச்சாரம் ஓய்கிறது
திருவனந்தபுரம்,ஏப்.6 - 140 தொகுதிகளைக் கொண்ட கேரளம், 126 தொகுதிகளைக் கொண்ட அசாம் மற்றும் 30 தொகுதி களைக் கொண்ட புதுச் சேரி யூனியன் பிரதேசத் தில் ஏப்ரல் 9ஆம் தேதி சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப் பதிவு நடைபெறு கிறது. இந்நிலையில், 3 மாநிலங்களிலும் செவ்வாய்க் கிழமை மாலை 6 மணியுடன் பிரச்சாரம் ஓய்கிறது. தொடர்ந்து ஒருநாள் இடைவெளிக்குப் பின்னர் வியாழ னன்று (ஏப். 9) காலை வாக்குப் பதிவு நடைபெறும்.
