பெயர்களால் நம்மை
அடையாளம் காண்கிறது
உறவு.
எண்களால் நம்மை
அடையாளம் காண்கிறது
ஷாப்பிங் மால்கள்
விரல் ரேகையால் நம்மை
அடையாளம் காண்கிறது
வருகைப் பதிவு இயந்திரம்
கையெழுத்தால் நம்மை
அடையாளம் காண்கிறது
வங்கி
முன்னோரால் நம்மை
அடையாளம் காண்கிறது
பத்திரப் பதிவுத்துறை
நாள் நட்சத்திரங்களால் நம்மை
அடையாளம் காண்கிறது
ஜோதிடம்
கைரேகையால் நம்மை
அடையாளம் காண்கிறது
காவல்துறை
தொண்டால் துரோகத்தால் நம்மை
அடையாளம் காண்கிறது
வரலாறு