கொல்கத்தா, ஜன. 20 - கொல்கத்தா பெண் மருத்துவா் படு கொலை வழக்கில், குற்றவாளி என அறிவிக்கப்பட்டிருக்கும் சஞ்சய் ராய்-க்கு சாகும்வரை சிறைத்தண்டனை வழங்கி சீல்டா மாவட்ட அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கொல்கத்தாவில் பணியில் இருந்த முதுநிலை பெண் பயிற்சி மருத்து வர் (31 வயது), கடந்த ஆகஸ்ட் 8 அன்று கொடூரமான முறையில் பாலி யல் வன்கொலை செய்யப்பட்டார். நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சி யை ஏற்படுத்திய இந்த வழக்கில், மரு த்துவர்கள், பெண்கள் அமைப்புக் களின் போராட்டத்திற்குப் பிறகு, அதே மருத்துவமனையில் தன்னார்வலராக பணியாற்றிவந்த சஞ்சய் ராய் என்பவர் கைது செய்யப்பட்டார். அவர் மீது அக்டோபர் 7 அன்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப் பட்டு, சீல்டா மாவட்ட கூடுதல் மற்றும் அமர்வு நீதிமன்றத்தில் நவம்பர் 11 முதல் 57 நாட்கள் விசாரணை நடை பெற்றது. அதன் முடிவில், கடந்த ஜன வரி 18 அன்று தீர்ப்பு வழங்கிய நீதிபதி அனிர்பன் தாஸ், பெண் மருத்துவர் பாலியல் வன்கொலை வழக்கில் சஞ்சய் ராய் தான் குற்றவாளி என்பதை உறுதி செய்தார். தண்டனை விவரங்களை திங்கட்கிழமையன்று அறிவிப்பதாகவும் கூறினார். அதன்படி திங்களன்று நீதிமன்றம் கூடியதும், அரிதிலும் அரிதான வழக்கு என்பதால், குற்றவாளிக்கு அதிகபட்ச தண்டனையாக மரண தண்டனை விதிக்க வேண்டும் என்று சிபிஐ தரப்பில் வாதிடப்பட்டது. இதையடுத்து, நீதிபதி அனிர்பன் தாஸ், குற்றவாளி சஞ்சய் ராயைப் பார்த்து, உங்களுக்கு எந்தவிதமான தண்டனை வேண்டும்? என்று கேட்டார். அதற்கு சஞ்சய் ராய், தான் ஒரு நிர பராதி என்றும், தன்மீதான குற்றச்சாட்டு முற்றிலும் பொய்யாக உருவாக்கப் பட்டது என்றும் கூறினார். நான் எந்த தவறும் செய்யவில்லை, இந்த குற்றச்சாட்டு முற்றிலும் பொய்யாக பதி யப்பட்டது. என்னை எதுவும் பேசவிட வில்லை என்றும் பதிலளித்தார். அவற்றைக் கேட்டுக் கொண்ட நீதிபதி அனிர்பன் தாஸ், பெண் மருத்து வரை பாலியல் வன்கொலை செய்த சஞ்சய் ராய்க்கு சாகும்வரை சிறையில் அடைக்கும் வகையில் ஆயுள் தண்டனை விதிப்பதாகவும், ரூ. 50 ஆயிரம் அபராதம் விதிப்பதாகவும் தெரி வித்தார். மேலும், பாதிக்கப்பட்டவரின் குடும்பத்திற்கு ரூ. 17 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என மேற்கு வங்க அரசுக்கும் உத்தரவிட்டார்.