மதுரை:
“விசாரணை” என்ற பெயரில் மதுரை காவல்துறை குற்றப்பிரிவு உதவி ஆணையர் ஒருவர் தலைமையிலான தனிப்படையினர் திருட்டு வழக்கு தொடர்பாக நான்கு தூய்மைக் காவலர்களை அழைத்துச் சென்று சித்ரவதை செய்ததோடு ஒரு துப்புரவுத் தொழிலாளியை கடுமையாகத் தாக்கியுள்ளனர். அந்தத் தொழிலாளி மன உளைச்சலால் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
மதுரையில் பைகாரா பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்புஒரு வீட்டில் 150 பவுன் நகை திருடுபோனது. இதை “துப்புத்துலக்க” காவல்துறை குற்றப்பிரிவு உதவி ஆணையர் தலைமையில் தனிப்படைஅமைக்கப்பட்டது. இந்தப் படை பலரைப் பிடித்து விசாரித்து அனுப்பிவிட்டது. விசாரணைக்காக திருப்பரங்குன்றத்தைச் சேர்ந்த தூய்மைக் காவலர் கண்ணன், சக தூய்மைக் காவலர்கள் மாரிமுத்து, காளிமுத்து, ஸ்டாலின் ஆகியோரையும் விசாரணைக்கு அழைத்துச் சென்று சித்ரவதை செய்துள்ளது. இவர்கள் மாநகராட்சி 100-ஆவது வார்டு தூய்மைக் காவலர்கள் ஆவர். இந்த நிலையில் காவல்துறையின் தாக்குதலில் மன உளைச்சலுக்கு உள்ளான கண் ணன் வெள்ளியன்று தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
இந்த சம்பவம் குறித்து மா.கணேசன், மதுரை மாநகராட்சி தொழிலாளர் சங்க செயலாளர் ம.பாலசுப்பிரமணியன், விடுதலைச் சிறுத்தைகள் மாவட்டச் செயலாளர் கதிரவன் ஆகியோர் குற்றப்பிரிவு காவல்துறை உதவிஆணையரை சந்தித்துப்பேசியுள்ளனர்.இதுகுறித்து மதுரை மாநகராட்சி தொழிலாளர் சங்க பொதுச் செயலாளர் ம.பாலசுப்பிரமணியம் வெள்ளி யன்று கூறியதாவது:-
இந்தச் சம்பவம் தொடர்பாக தூய்மைக் காவலர்களிடம் விசாரணை நடைபெற்றுக்கொண்டிருக்கும் நேரத்திலேயே குற்றப்பிரிவு உதவி ஆணையர் சக்கரவர்த்தியை சந்தித்து,விசாரணை தொடர்பாக நீதிமன்றத் திற்கு தகவல் தெரிவித்தோ, குறைந்தபட்சம் அவர்கள் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்தோஅல்லது அவர்கள் பணியாற்றும் மதுரை மாநக ராட்சிக்கு தகவல் தெரிவித்திருக்கவேண்டும். 24 மணி நேரத்தில் அவர்களை நீதிமன்றக் காவலுக்கு உட்படுத்த வேண்டும். அவர்களை நீதிமன்றக் காவலுக்கு உட்படுத்தி விசாரணை செய்யுங்கள். இவர்களுக்கு ஏதாவது ஒன்று நிகழ்ந்தால் அதற்கு தாங்கள் தலைமையிலான தனிப்படை தான் பொறுப்பு” எனக் கூறிவிட்டு வந்தோம்.
இந்த நிலையில் தூய்மைக் காவலர்கள் மாரிமுத்து, காளிமுத்து, ஸ்டாலின் ஆகியோரை உளவியல் ரீதியாக சித்ரவதை செய்து விசாரணை முடிந்துவிட்டதாக அனுப்பியுள்ளனர்.தொடர்ந்து கண்ணனை கடுமையாகத் தாக்கி சித்ரவதை செய்துள்ளனர். அவரது மனைவி தனலெட்சுமி, மகன் கருப்பசாமி (18) ஆகியோரையும் விசாரணைக்காக அழைத்து “உளவியல் ரீதியாக சித்ரவதை” செய்துள்ளனர். பின்னர் மூவரையும் வியாழன் இரவு விடுவித்துள்ளனர். இரவு வீட்டிற்குச் சென்ற கண்ணன் வெள்ளிக்கிழ மை அதிகாலை தூக்கிட்டு தற்கொ செய்து கொண்டார்” என்றார்.மேலும் அவர் கூறுகையில், “இந்தச்சம்பவத்தில் தொடர்புடைய உதவி ஆணையர் சக்ரவர்த்தி தலைமை யிலான தனிப்படையினர் மீது துறை ரீதியான கிரிமினல் நடவடிக்கை எடுக்கவேண்டும். கண்ணன் உடற்கூராய்வை குறைந்தது மூன்று மருத்துவர்கள் நடத்த வேண்டும். அதை வீடியோவில் பதிவு செய்ய வேண்டும். கண்ணன் குடும்பத்திற்கு ரூ.50 லட்சம் நிவாரணம்குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப்பணி வழங்கவேண்டும். கண்ணன் தற்கொலைக்கு காவல்துறை தான் காரணம். இந்த வழக்கை சிபிசிஐடி விசாரிக்க வேண்டும்” என்றார்.