மரபணுக்களை மாற்றிக்கொள்ளும் வண்ணத்துப்பூச்சிகள்
யுகே வண்ணத்துப்பூச்சிகள் மற்றும் அந்துப் பூச்சிகள் பற்றி நடந்த மரபணு ஆய்வில் ஐரோப்பிய வண்ணத்துப்பூச்சிகள் பற்றி திடுக்கிடவைக்கும் விவரங்கள் கிடைத்துள்ளன. காலநிலை மாற்றத்தால் ஒரு வண்ணத்துப்பூச்சி இனத்தில் இருந்து இரண்டு இனங்கள் தோன்றியுள்ளது கண்டறியப்பட்டது. யுகே-யின் மிக அழகான வண்ணத்துப்பூச்சிகளில் ஒன்றான சாக்கில் ப்ளு (Chalkhill Blue) கோடையில் தெற்கு இங்கிலாந்தில் புல்வெளிப் பிரதேசங்களில் பறந்துசெல்வதை சாதாரணமாக காணலாம்.
கூட்டுயிரி வாழ்வு இந்த வண்ணத்துப்பூச்சிகளின் எறும்பு களுடனான நெருங்கிய, வழக்கத்திற்கு மாறான நட்பு வியப்புக்குரியது. ஐரோப்பா முழுவதும் இந்த வண்ணத்துப்பூச்சிகளின் இளம் புழுக்களுக்கும் எறும்புகளுக்கும் இடையில் ஒரு கூட்டுயிரி வாழ்க்கை நடை பெறுகிறது. இளம் புழுக்கள் சுரக்கும் சுக்ரோஸ் உள்ளிட்ட இனிப்புச் சுவை அடங்கிய திரவங்களின் துளிகள் எறும்பு களை கவர்கிறது. அவை ஆற்றல் பெற அருந்துகின்றன. பதிலுக்கு எறும்புகள் இளம் உயிரினங்களுக்காக உருவாக்கிய சிறிய அறைகளில் அவற்றிற்குப் பாது காப்பளிக்கிறது. இதனால் வண்ணத்துப்பூச்சிகள் வள முடன் வாழ்கின்றன. ஆனால் இவற்றின் எண்ணிக்கை அச்சுறுத்தலுக்கு உள்ளாகி யுள்ளது. இந்த சிறப்பு அம்சத்துடன் விஞ்ஞா னிகள் மற்றொரு அபூர்வ உண்மையையும் கண்டறிந்தனர். சைக்கி (Psyche) என்ற முன்னோடித் திட்டத்தின் கீழ் ஐரோப்பாவில் உள்ள 11,000 வண்ணத்துப்பூச்சிகள், அந்துப் பூச்சிகளின் மரபணு வரிசை கால நிலை மாற்றம் மற்றும் வாழிட இழப்பால் எவ்வாறு பாதிக்கப்படுகிறது என்பது பற்றி ஆராயப்பட்டுவருகிறது. சைக்கி திட்டத்தின்படி வாழிடத்தி றகேற்ப இந்த வண்ணத்துப்பூச்சியின் செல்கள் வேறுபட்ட எண்ணிக்கையுள்ள குரோமோசோம்களை பெற்றுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. குரோமோசோம்கள் என்பவை ஒரு உயிரினத்தின் பாரம்பரி யத்தை எடுத்துக்கூறும் டிஎன்ஏ-க்களை கொண்டது. தெற்கு ஐரோப்பாவில் இந்த வண்ணத்துப்பூச்சிகள் 87 குரோமோ சோம்களுடன் உள்ளன. வடக்கு நோக்கிய பயணத்தின் முடிவில் ஒவ்வொரு குரோமோசோமாக அதிக ரிக்கிறது. வடக்கு ஐரோப்பாவிற்கு வந்து சேரும்போது இவற்றின் குரோமோ சோம்களின் எண்ணிக்கை 90 ஆக அதி கரிக்கிறது. “ஒவ்வொரு உயிரினமும் ஒரு குறிப்பிட்ட குரோமோசோம் எண்ணிக்கை யை நிலையாகப் பெற்றுள்ளது என்ற கோட்பாட்டிற்கு இது எதிரானது” என்று கேம்பிரிட்ஜ் அருகில் உள்ள வெல்கம் சாஞ்சர் கழகத்தின் (Wellcome Sanger Institute) பரிணாம உயிரியலாளர் ஷார்லட் ரைட் (Charlotte Wright) கூறுகிறார். இந்த மாற்றத்திற்கான காரணம் புதிராக உள்ளது. இறுதி பனிக்காலத்திற்குப் பிறகு பனிப் பாறைகள் பெருமளவில் உருகி விட்டன. குரோமோசோம் எண்ணிக்கை உயர்விற்கு இது ஒரு காரணமாக இருக்க லாம். “ஒரு மில்லியன் அல்லது அதற்கும் முன் உள்ள காலத்தை நாம் திரும்பிப் பார்த்தால் ஒரு உயிரினம் ஒரு ஒற்றை உயிரி னத்தில் இருந்து எப்போது இரண்டாக பரிண மித்தது என்று சொல்லமுடியும். இது எவ்வாறு நடந்தது? அந்துப் பூச்சிகளும் வண்ணத்துப்பூச்சிகளும் அந்த நேரத்தில் என்ன நிகழ்ந்தது என் பதை நாம் இப்போது எவ்வாறு அறிவது? இதன் சுருக்கத்தை, இரண்டு உயிரினங்கள் ஒரு உயிரினத்தில் இருந்து உருவானதை இந்த ஆய்வு காட்டுகிறது. செயல்மிகு பரி ணாமத்தை இது தெளிவாக கூறுகிறது” என்று ஷார்லட் ரைட்டின் கருத்தை ஆத ரிக்கும் அதே ஆய்வுக் கழகத்தின் மற்றொரு விஞ்ஞானி மார்க் ப்ளாக்ஸ்ட்டர் (Mark Blaxter) கூறுகிறார். பின்லாந்து ஊலு (Oulu) பல்கலைக் கழகம், பார்சிலோனா (Barcelona) பரி ணாம உயிரியல் கழகம் உட்பட ஐரோப்பா வில் உள்ள மற்ற ஆறு முன்னணி ஆய்வு நிறு வனங்களுடன் ஒருங்கிணைந்து வெல்கம் கழகம் இந்த திட்டத்தை நடத்துகிறது. கிரேக்க புராணத்தில் கடவுள்களின் அரசன் என்று வர்ணிக்கப்படும் ஜூஸ் (Zeus) என்பவர் வண்ணத்துப்பூச்சிகளுக்கு இறக்கைகளை வழங்கினார். இதற்குக் காரணமாக இருந்த ஆன்மாவிற்கான கிரேக்க கடவுளான சைக்கியின் பெயர் இத்திட்டத்திற்கு வைக்கப்பட்டது. சைக்கி எப்போதும் வண்ணத்துப்பூச்சி களின் இறகுகளுடன், கிரேக்க புரா ணத்தில் அழகிய பெண் கடவுளாக சித்த ரிக்கப்படுகிறார். நவீன மரபணுவியல் வளர்ச்சி பெறும் முன்பு அந்துப் பூச்சி களுக்கும் வண்ணத்துப்பூச்சிகளுக்கும் இடையிலான தொடர்பு சர்ச்சைக்குரியதாக இருந்தது. ஆனால் டி என் ஏ தொழில்நுட்பம் வண்ணத்துப்பூச்சிகள் அந்துப் பூச்சிகளின் ஒரு முக்கிய துணைக் குழுவே என்று தெளி வாகக் கூறியது. பூமியில் பெயரிடப்பட்டுள்ள அனைத்து உயிரினங்களிலும் 10% அந்துப் பூச்சிகள் அல்லது வண்ணத்துப்பூச்சிகளே. வாழிட மாற்றம், வெப்பநிலை மற்றும் சார்ந்துள்ள தாவரங்களை நம்பியே இந்த உயிரி னங்கள் வாழ்கின்றன. இவற்றை கூடுதலாக அறிவதன் மூலம் இயற்கையில் நிகழும் மாற் றங்களை நாநம் எளிதாகப் புரிந்துகொள்ள லாம். இந்த வண்ணத்துப்பூச்சியில் நடை பெறும் மாற்றங்கள் இதற்கு சிறந்த எடுத்துக்காட்டு. மனிதர்களுக்கு இருக்கும் 23 இணை குரோமோசோம்களின் எண்ணிக்கையுடன் ஒப்பிடும்போடு இந்த வண்ணத்துப்பூச்சிக்கு உள்ள 87 குரோமோசோம்கள் என்பது மிக அதிகமானது. ஆனால் அதிக எண்ணிக்கையுடன் அந்துப் பூச்சிகள், வண்ணத்துப்பூச்சிகள் வாழ்வது பூமியில் மிக பொதுவானது. மற்றொரு ப்ளூ வண் ணத்துப்பூச்சியான பாலியோமேட்டஸ் அட்லாண்டிகஸ் (Polyommatus atlanticus) என்ற இனம் சாதனையளவாக 229 இணை குரோமோசோம்களைப் பெற்றுள்ளது. உண்ணும் உணவிற்கு ஆதாரமாகும் உயிரினங்கள் அழிந்த இனமாக சமீபத்தில் அறி விக்கப்பட்ட லெபிடாப்டிரா (lepidoptera) இனத்தைச் சேர்ந்த செர்ஸஸ் ப்ளூ (xerces blue) வண்ணத்துப்பூச்சி இதற்கு இன்னொரு எடுத்துக்காட்டு. இந்த வண்ணத்துப்பூச்சியின் அருங்காட்சியக மாதிரிகளின் மரபணுக்கள் அமெரிக்கா வில் ஆராயப்பட்டபோது இந்த இனம் மிக ஆபத்தான நிலையில் இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. இது போல அழியும் ஆபத்தில் இருக்கும் மற்ற வண்ணத்துப் பூச்சி இனங்களை அடையாளம் கண்டு அவற்றை மீட்பதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கம். ஒரு உயிரினம் அதன் சூழலில் எவ்வாறு நலமாக வாழ்கிறது என்பதை ஒரு மரபணு வரிசை கூறுகிறது. வண்ணத்துப்பூச்சிகள் மற்றும் அந்துப் பூச்சிகள் இயற்கையில் சிறந்த அயல் மகரந்த சேர்க்கைக்கு உதவும் உயிரினங்கள். அவை பறவைகளின் உண வுக்கான முக்கிய ஆதாரம். இந்த உயிரி னங்கள் பூமியில் வாழ்வது மிக இன்றிய மையாதது. இதற்கு இந்த வண்ணத்துப் பூச்சி பற்றிய ஆய்வு பெரிதும் உதவும் என்று ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.