tamilnadu

img

மாவட்ட தலைநகருக்கு செல்ல 90 கி.மீ பயணிக்கும் அவலம் கொல்லிமலையில் தார்ச்சாலை அமைத்திடுக!

நாமக்கல், டிச.27- கொல்லிமலையின் சேளூர்நாடு, குழிப்பட்டி முதல் எருமப்பட்டி வரை  செல்லும் குதிரை சாலையை, தார்ச்  சாலையாக மாற்றித்தர வேண்டும் என்று வலியுறுத்தி தமிழ்நாடு மலை வாழ் மக்கள் சங்கத்தினர் டிசம்பர் 27  அன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நாமக்கல் மாவட்டம், கொல்லி மலை வட்டத்திற்குட்பட்ட சேளூர் நாடு, தின்னனூர் நாடு, தேவனூர்நாடு உள்ளிட்ட பகுதிகளில்  5 ஆயிரம்  குடும்பங்களில் 15 ஆயிரம் பேர் வசித்து வருகின்றனர். குறிப்பிட்ட நேரங்களில் இயக்கப்படும் பேருந்து களில் மாவட்ட தலைநகருக்கு செல்ல  சுமார் 4 மணி நேரமும், 75 முதல் 90 கி.மீ வரை பயணிக்க வேண்டிய நிலையும் உள்ளது.  மணப்பாறை சந்தைக்கு நீண்ட தூரம் பயணிக்க வியாபாரிகள் தயங்குவதால், விவசாயிகள் விளை பொருட்களை உள்ளூரில் சொற்ப விலைக்கே கொடுக்க வேண்டிய நிலை உள்ளது. விபத்து, பிரசவம்  உள்ளிட்ட அவசர தேவைகளுக்கு  நீண்ட நேரம் பயணிக்க வேண்டியுள்ள தால், மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே உயிரிழப்புகள் நிகழ்  கின்றன. இதற்கு மாற்று வழியாக  சேளூர்நாடு, குழிப்பட்டி முதல் எரு மப்பட்டி வரை பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் பயன்படுத்தப்பட்டு வந்த  குதிரை சாலை இன்று வரை மக்கள்  பயன்பாட்டில் உள்ளது. இச்சாலை யை தார்ச்சாலையாக அமைத்துக்  கொடுத்தால் மாவட்ட தலைநகருக்கு  செல்ல 34 கி.மீ. தூரம் மட்டுமே ஆகும். இதனால் கொல்லிமலையில் வாழும்  பொதுமக்களின் பொருள், நேரம் மற்  றும் உயிர் சேதம் ஏற்படுவது தடுக் கப்படும். எனவே, குதிரைச்சாலையை புன ரமைத்து தார்ச்சாலையாக மாற் றித்தர வேண்டும் என வலியுறுத்தி சேளூர் நாடு, தின்னனூர் நாடு, தேவ னூர் நாடு பகுதிகளைச் சேர்ந்த ஆயி ரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்  தின் தலைமையில் வாழ்வில்ஓரி அரங்கத்தில் வெள்ளியன்று கூடினர். அங்கு மக்களின் கோரிக்கை மனுக்களை சிபிஎம் திண்டுக்கல் மக்  களவை உறுப்பினர் ஆர்.சச்சிதா னந்தம் பெற்றுக் கொண்டார். 

ஆர்.சச்சிதானந்தம் எம்.பி. பங்கேற்பு

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மலை வாழ் மக்கள் சங்க மாவட்டத் தலை வர் எஸ்.தங்கராசு தலைமை வகித்  தார். ஆர்.சச்சிதானந்தம் எம்.பி,  தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்  தின் மாநிலத் தலைவர் பி.டில்லி பாபு, மாநிலப் பொருளாளர் பொன்னு சாமி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாநில செயற்குழு உறுப்பினர்  எஸ்.முத்துக்கண்ணன், மாவட்டச் செயலாளர் எஸ்.கந்தசாமி, மாவட்ட  செயற்குழு உறுப்பினர்கள் ஏ.ரங்க சாமி, ஏ.டி.கண்ணன், மலைவாழ் மக்  கள் சங்க மாவட்டச் செயலாளர்  எஸ்.தங்கராஜ், கே.சி.சின்னசாமி, மாணவர் சங்க மாவட்டச் செயலாளர்  சரவணன், மாவட்டத் தலைவர் தங்க ராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர். தலைச்சுமையாக கொண்டு வரப்பட்ட 3,000 மனுக்கள் கோரிக்கை மனுக்களை தலைச் சுமையாக எடுத்துக் கொண்டு, தாம்பூலம் தட்டுடன் ஊர்வலமாக வட்டாட்சியர் அலுவலகத்திற்கு போராட்டக்குழுவினர் வந்தடைந்தனர்.  வட்டாட்சியரிடம் திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் வருவ தாக போராட்டக்குழுவினர் கூறி யிருந்தும், அலுவலகத்தில் அவர்  இல்லை. இதையடுத்து தாம்பூல தட்  டில் தேங்காய், பழம், பத்தி, சூடத்து டன் நூதன முறையில் சிறப்பு நலத் திட்ட வட்டாட்சியரிடம் மனுக்களை அளித்தனர். 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்ட வட்டாட்சியர், நாமக்கல் மாவட்ட ஆட்சியரின் கவ னத்திற்கு கொண்டு சென்று உரிய நட வடிக்கை மேற்கொள்ள இருப்பதாக  உறுதியளித்தார். ஜனவரி 31 ஆம்  தேதிக்குள் சாலை அமைக்காவிட் டால், மக்களே ஒன்று திரண்டு சாலை  அமைக்கும் பணியில் ஈடுபடுவது என்று அறிவிக்கப்பட்டு, போராட்டம்  தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது.