பட்ஜெட் தாக்கல் தமிழக சட்டமன்றம் பிப். 17-இல் கூடுகிறது!
சென்னை, பிப். 7 - தமிழ்நாடு அரசின் பட்ஜெட் கூட்டத் தொடர், பிப்ரவரி 17 அன்று கூடும் என்று சட்டப்பேரவைத் தலைவர் மு. அப்பாவு அறிவித்துள்ளார். அன்றைய தினம் காலை 9.30 மணிக்கு இடைக்கால பட்ஜெட்டை, நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்வார்; 2026-27க்கான முன்பண மானியக் கோ ரிக்கை, கூடுதல் செலவு மானியக் கோரிக்கை 20-ஆம் தேதி அளிக்கப்படும்; முன்னதாக, சட்டப்பேரவை கூட்டத்தொடர் எத்தனை நாட்கள் நடத்தப்படும் என அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில் முடிவு செய் யப்படும் என்றும் அவர் தெரி வித்துள்ளார். சட்டப்பேரவை நிகழ்வு களை நேரடி ஒளிபரப்பு செய்வது தொடர்பாக பேட்டி யளித்த சபாநாயகர் மு. அப்பாவு, “கூட்டத்தொடர் முழுவதையும் நேரலை செய்ய வேண்டும் என்பதே முதல்வரின் எண்ணமாக இருக்கிறது. கூட்டத்தொட ரில் மானிய கோரிக்கைகள் மீதான விவாதத்தையும் நேரடியாக ஒளிபரப்பு செய் வதற்கு அனைத்து நடவடிக் கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது என்று தெரி வித்தார்.