வடமாநில இளைஞர் மீது கொடூரத் தாக்குதல்!
சென்னை, டிச. 30 - திருத்தணியில் வடமாநில இளை ஞர் ஒருவர், கொடூரமான முறையில் தாக்கப்பட்ட சம்பவத்திற்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்ட னம் தெரிவித்துள்ளது. இதுதொடர் பாக, கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் அறிக்கை ஒன்றை விடுத் துள்ளார். அதில், அவர் குறிப்பிட்டிருப்ப தாவது: கொலைவெறித் தாக்குதல் அதிர்ச்சியை அளிக்கிறது திருத்தணி ரயில் நிலையம் அருகே இரு தினங்களுக்கு முன்பு புறநகர் ரயிலில் பயணம் செய்த வடமாநில இளைஞரை போதையில் இருந்த நான்கு சிறுவர்கள் கத்தியால் வெட்டி கொடூரமாகத் தாக்கி அதனை வீடி யோ எடுத்து இணைய பக்கத்தில் வெளி யிட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சி யை அளிக்கிறது. கொடும் வெட்டுக்கா யங்களுடன் மீட்கப்பட்ட இளைஞர் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருவது ஆறுதல் அளிக்கிறது. இந்த தாக்குதல் சம்பவத்தில் ஈடு பட்ட நான்கு சிறுவர்களை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த கொடூர மான செயலில் ஈடுபட்ட சிறுவர்கள் கஞ்சா போதையில் இருந்ததாகவும், கைபேசி மூலம் கத்தியை வைத்து மிரட்டுவதுபோல் ரீல்ஸ் எடுத்தபோது, வடமாநில இளைஞர் முறைத்தார் என்றும், எனவே, அவரை திருத் தணி ரயில் நிலையத்தில் இறக்கி ரயில் குடியிருப்பு பகுதியில் அழைத்து சென்று கத்தியால் வெட்டி படம் பிடித்து இணைய பக்கத்தில் ரீல்ஸ் வெளி யிட்டதாகவும் தெரிவித்துள்ளனர். இந்த கொலைவெறித் தாக்குதலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது. போதைப்பொருள் விற்பனை ஒடுக்கப்பட வேண்டும் தமிழகத்தில் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை பல்வேறு சமூகக் குற்றங்களுக்கு ஆளாவதில் போதைப் பொருள் ஒரு முக்கிய காரணியாக விளங்குகிறது. எனவே, தமிழகத்தில் தடை செய்யப்பட்டுள்ள கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் விற்பனையை அறவே ஒழிப்பதற்கு சட்டவிரோதமாக விற்பனை செய்யும் கும்பல்கள் மீது கடுமையான நடவடிக் கைகளை மேற்கொள்ள வேண்டும்; போதைப் பொருட்களுக்கு எதி ராக இளைஞர்கள், சிறுவர்கள் மத்தி யில் போதிய விழிப்புணர்வு நட வடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்; வடமாநிலத் தொழிலாளர் கள் பணிபுரியும் இடங்கள், குடியிருப்பு கள் உள்பட அவர்களுக்கு உரிய பாதுகாப்பு அளித்திட வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தமிழக அரசையும், காவல்துறையையும் வலியுறுத்துகிறது. ரயில்வே நிர்வாகம் இழப்பீடு வழங்க வேண்டும் ரயில் பயணங்களின் போது இது போன்ற வன்முறைச் சம்பவங்கள் இனி நடக்காமலிருக்க ரயில்வே காவல் துறையினர் உரிய கண்காணிப்பு நட வடிக்கைகளை தீவிரப்படுத்தி பயணி கள் பாதுகாப்பை உறுதி செய்வது டன், கடுமையான வெட்டுக் காயங்களு டன் சிகிச்சைப் பெற்று வரும் இளை ஞருக்கு உரிய மருத்துவ சிகிச்சையும், அவரது வாழ்வாதாரத்திற்கு உரிய இழப்பீடு அளிக்க வேண்டுமெனவும் ரயில்வே நிர்வாகத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது.இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப் பட்டு உள்ளது.