பிரேசில்: முன்னாள் ஜனாதிபதி போல்சானரோ காவல் நீட்டிப்பு
பிரேசில் உச்சநீதிமன்ற அமர்வு அந்நாட்டின் முன்னாள் ஜனாதிபதி போல்சான ரோவின் காவலை நீட்டித்து உத்தர விட்டுள்ளது. கடந்த தேர்தலில் தோற்றபின் ஆட்சிக்கவிழ்ப்பு நட வடிக்கையில் ஈடுபட்டது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் படி அவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரைத் தொடர்ந்து தடுப்புக் காவலில் வைக்கலாமா என்பது குறித்த விசாரணையின் போது நீதிமன்ற உத்தரவுகளை அவர் தொடர்ந்து மீற முயற்சிப்பதாகவும், நாட்டை விட்டு தப்பி ஓடும் ஆபத்து இருப்பதாகவும் நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர்.
தாய்லாந்தில் வெள்ளம் 33 பேர் பலி
தாய்லாந்தில் பெய்துவரும் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 33 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 100க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். தாய்லாந்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால், பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அந்நாட்டின் தெற்கு பகுதியில் உள்ள சிங்கோரா உள்பட 9 மாகா ணங்களில் கன மழை, வெள்ளப் பெருக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. கனமழை, வெள்ளத்தால் ஆயிரக்கணக்கான வீடுகள் தண்ணீரில் மூழ்கியுள்ளன.லட்சக்கணக்கான மக்கள் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
சர்வதேச அணுசக்தி முகமையை அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் ஆயுதமாக பயன்படுத்துகின்றன : ஈரான் கண்டனம்
தெஹ்ரான்,நவ.26- அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் சர்வதேச அணுசக்தி முகமையை ஆயுதமாக பயன்படுத்துகின்றன என ஈரான் கண்டனம் தெரிவித்துள்ளது. சர்வதேச அணுசக்தி முகமையில் நவம்பர் 20, வியாழக்கிழமையன்று ஒரு தீர்மானம் நிறைவேற்றபட்டது. இந்தத் தீர்மானமானது ஈரானிடம் உள்ள அணுசக்தி தொடர்பான பொருட்கள் மற்றும் அணுசக்தி மையங்கள் பற்றிய துல்லியமான தகவல்களை தாமதமின்றி சர்வதேச அணுசக்தி முகமையிடம் வழங்க வேண்டும் என்றும், அந்தத் தகவல்களைச் சரிபார்க்கத் தேவையான அனைத்து விதமான அணுகலையும் அம்முகமைக்கு வழங்க வேண்டும் என்றும் வற்புறுத்துகிறது. அவ்வமைப்பின் உறுப்பினர்கள் மீது அழுத்தம் கொடுக்கப்பட்டதன் விளை வாகவே இந்தத் தீர்மானம் நிறைவேற்றப் பட்டுள்ளதாக ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சகம் குற்றம் சாட்டியுள்ளது. இந்தத் தீர்மானத்தின் உள்ளடக்கம் ஈரானின் உரிமை களையும், சர்வதேச அணுசக்தி முகமை யின் அடிப்படை நடைமுறைகளையும் விதி களையும் மீறுகிறது எனவும் கூறியுள்ளது. இந்தத் தீர்மானமானது அமெரிக்கா, அதன் ஐரோப்பிய நட்பு நாடுகளான இங்கி லாந்து, பிரான்ஸ், ஜெர்மனி ஆகிய நாடு களால் முன்வைக்கப்பட்டது. 35 உறுப்பினர்களைக் கொண்ட சர்வதேச அணுசக்தி முகமையின் ஆளுநர் வாரியம் இந்தத் தீர்மானத்தை 19 வாக்குகள் ஆதரவுடன் நிறைவேற்றியது. சீனா, ரஷ்யா, நைஜர் ஆகிய மூன்று நாடுகள் தீர்மானத்திற்கு எதிராக வாக்களித்தன . 12 நாடுகள் வாக்களிக்காமல் விலகிக் கொண்டன. முன்னதாக இத்தீர்மானமானது, ஈரானின் அணுசக்தித் திட்டத்தை அரசியல் மயமாக்க முயற்சி செய்கிறது. எனவே அமைப்பின் உறுப்பு நாடுகள் தீர்மானத் திற்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டாம் என ரஷ்யா, சீனா, ஈரான் உள்ளிட்ட எட்டு நாடுகள் எச்சரிக்கை விடுத்திருந்தன. ஜூன் மாதம் ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே நடந்த 12 நாள் போரின்போது அமெரிக்காவும் இஸ்ரேலும் குண்டு வீசி சிதைக்கப்பட்ட அணுசக்தி மையங்கள் உட்பட, ஈரானின் அனைத்து அணுசக்தி மையங்களையும் ஆய்வு செய்ய அனுமதி கோரப்பட்டுள்ளது. அத்துடன் ஈரானிடம் உள்ள செறிவூட்டப் பட்ட யுரேனியம் இருப்பு விவரங்கள், யுரேனி யம் செறிவூட்டும் சென்ட்ரிஃப்யூஜ் இயந்திரங்களின் எண்ணிக்கை மற்றும் 2003-இல் கையெழுத்திடப்பட்ட சர்வதேச அணுசக்தி முகமை கூடுதல் நெறிமுறையை முழுமையாகச் செயல்படுத்துமாறும் இந்தத் தீர்மானம் கோருகிறது. 2003 இன் கூடுதல் நெறிமுறையானது, ஈரானில் உள்ள அனைத்து அணுசக்தி மையங்களிலும் திடீர் ஆய்வுகளை மேற்கொள்ள இம்முகமைக்கு அதிகாரம் கொடுப்பது குறிப்பிடத்தக்கது. இது ஐ.நா. அணுசக்தி முகமையை தமது அரசியல் இலக்குகளுக்காகவும் சட்ட விரோத கோரிக்கைகளைத் திணிக்கவும் அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் பயன்படுத்துகின்ற நடவடிக்கை. இது அவர்களின் பொறுப்பற்ற அணுகுமுறை யின் மற்றொரு அடையாளம் என ஈரான் குற்றம் சாட்டியுள்ளது. அணு ஆயுதப் பர வல் தடை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட நாடாக உள்ள ஈரானுக்கு அமைதியான அணு சக்தித் திட்டத்திற்கான உரிமையை இந்தத் தீர்மானம் மீறுகிறது எனவும் ஈரான் குற்றம்சாட்டியுள்ளது.
