tamilnadu

img

குமாரபாளையத்தில் புத்தகத் திருவிழா

நாமக்கல், டிச.27- குமாரபாளையத்தில் 10 நாட்கள் நடை பெறும் புத்தகத் திருவிழா வெள்ளியன்று துவங்கியது. விடியல் ஆரம்பம் அமைப்பு சார்பில் 4  ஆம் ஆண்டு புத்தகத் திருவிழா, நாமக் கல் மாவட்டம், குமாரபாளையம் நகரில் பள் ளிபாளையம் பிரிவு சாலையில் அமைந் துள்ள ஜீரோ வேல்யூம் கட்டிடத்தில் வெள்ளி யன்று துவங்கியது. விடியல் ஆரம்பம் அமைப்பின் நிறுவனர் ஆர்.பிரகாஷ் வரவேற் றார். மாவட்ட காவல் உதவி கண்காணிப் பாளர் சண்முகம் இத்திருவிழாவை துவக்கி  வைத்து, பேச்சுப்போட்டியில் வெற்றி பெற்ற  மாணவிகளுக்கு பரிசு வழங்கினார். 25க்கும்  மேற்பட்ட பதிப்பகத்தார் தங்களது ஆயிரக்க ணக்கான பதிப்புகளை காட்சிப்படுத்தியுள் ளனர். தினசரி நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பல் வேறு போட்டிகள் நடத்தப்பட்டு, புத்தகங் கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப் படுகிறது. தொடர்ந்து பத்து நாட்கள் நடைபெ றும் இத்திருவிழாவில் பொதுமக்களும், இளைஞர்களும் கலந்து கொள்ள வேண் டும், என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள் ளனர்.