tamilnadu

தீக்கதிர் விரைவு செய்திகள்

கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம்

சென்னை: “தமிழ கத்துக்கு தர வேண்டிய ரூ.4,034 கோடியை தராமல் கிராமப்புற மக்க ளின் வாழ்வில் விளை யாடுகிறது ஒன்றிய பாஜக அரசு. இதுபோன்ற கார ணங்களால் தமிழகத்திற்கு ஏப்ரல் 6 ஆம் தேதி வருகை தரும், பிரதமர் மோடியை கண்டித்து தமிழ கத்தில் உள்ள அனைத்து  மாவட்ட தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்” என்று தமிழ் நாடு காங்கிரஸ் கமிட்டி யின் தலைவர் செல்வப்பெ ருந்தகை கூறியுள்ளார்.

இன்று முதல் கட்டண குறைப்பு

சென்னை: மகளிர் பெயரில் பதிவாகும் பத்தி ரங்களுக்கு, பதிவு கட்ட ணத்தில் ஒரு சதவீதம் குறைப்பு ஏப்ரல் 1 முதல்  அமலுக்கு வருகிறது. எனவே, அதை செயல் படுத்தும் வகையில், 10  லட்சம் ரூபாய் வரையி லான வீடு, மனை, விவசாய  நிலங்களை, மகளிர் பெயரில் வாங்குவோ ருக்கு, ஒரு சதவீதம் பதிவு  கட்டணம் குறைப்பு சலுகை,  இன்று (செவ்வாய்க் கிழமை) முதல் அமலுக்கு வருகிறது. இதற்கான அர சாணையை பதிவுத்துறை  செயலாளர் குமார் ஜெயந்த்  வெளியிட்டுள்ளார்.

5 நாட்கள் படப்பிடிப்புக்கு தடை!

உதகை: கோடை விடு முறையையொட்டி சுற்று லாப் பயணிகள் வருகை அதிகரிக்கும் என்பதால் நீலகிரி மாவட்டத்தில் தோட்டக்கலைத் துறைக்கு சொந்தமான இடங்களில் ஏப்.1 முதல் ஜூன் 5 வரை  படப்பிடிப்பு நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி, தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, தேயிலை பூங்கா, குன்னூர் சிம்ஸ் பூங்கா உள்ளிட்ட தோட்டக்கலை துறைக்கு சொந்தமான 7 இடங்களில் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

தங்கம் விலை புதிய உச்சம்'

 சென்னை: வாரத்தின்  முதல் நாளான திங்கள் கிழமை (மார்ச் 31) ஆப ரணத் தங்கத்தின் விலை  புதிய உச்சத்தை எட்டியு உள்ளது. அதன்படி சென் னையில் ஆபரணத் தங்கத் தின் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.520 உயர்ந்து, ரூ.67,400-க்கு  விற்பனையாகிறது. அதே சமயம் கிராம் ஒன்றுக்கு ரூ.65 உயர்ந்து ரூ.8,425-க்கு  விற்கப்படுகிறது.

இன்று ஊரக வளர்ச்சிதுறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்

சென்னை, மார்ச் 31 - பெரம்பலூர் மாவட்ட ஆட்சியரை கண்டித்து செவ்வாய்க்கிழமை (ஏப்.1) தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை  அலுவலர் சங்கத்தினர் வெளிநடப்பு ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளனர். தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர் சங்கத்தி னர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பெரம்பலூர் மாவட்ட ஆட்சியரிடம் முறையிட்டனர். அப்போது ஆட்சியர்  தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநிலத் தலைவர் மு.பாஸ்கரன் உள்ளிட்டோரை கைது செய்ய உத்தரவிட்டு அநாகரிகமாக நடந்து கொண்டார். இதனை கண்டித்து ஏப்.1 அன்று தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர் சங்கத்தினர் வெளிநடப்பு ஆர்ப்பாட்டம், ஏப்.8 அன்று மாவட்ட ஆட்சியர் அலுவல கங்கள் முன்பு கருப்பு பட்டை அணிந்து கண்டன ஆர்ப்பாட்டம்  நடத்த உள்ளனர். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில் ஏப்.2 அன்று அனைத்து வட்டத் தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்த தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் அழைப்பு  விடுத்துள்ளது. இந்தப் போராட்டங்களில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சி  மற்றும் ஊராட்சித் துறை அனைத்து ஓய்வூதியர்கள் பங்கேற்கும் என்று சங்கத்தின் மாநிலத் தலைவர் ச.ராம மூர்த்தி, மாநில பொதுச் செயலாளர் பா.ரவி ஆகியோர் விடுத்திருக்கும் அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

சட்டப் பேரவையில் இன்று...

தமிழ்நாடு சட்டப்பேர வையில் துறை வாரியாக  மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடை பெற்று வருகிறது. சனிக் கிழமை, ஞாயிற்றுக் கிழமை மற்றும் ரமலான் (மார்ச் 29, 30, 31) என தொ டர்ந்து மூன்று நாட்கள்  விடுமுறை அளிக்கப் பட்டது.  இந்நிலையில், செவ் வாய்க்கிழமை (ஏப்.1)  பேரவை மீண்டும் கூடு கிறது. நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறை முகங்கள் துறை, கட்டி டங்கள் மற்றும் பொதுப் பணித் துறைகள் மீது விவாதமும் அமைச்சரின் பதிலுரையும் இடம் பெறுகிறது.