இந்திய மக்களின் ஒற்றுமையை அழிக்கும் நச்சு தான் பாஜக!
சிபிஎம் அகில இந்திய மாநாட்டு கலைவிழாவில் அ. சவுந்தரராசன் பேச்சு
சென்னை, மார்ச் 31- “இந்தியாவை கொஞ்சம் கொஞ்சமாக சீரழித்துக் கொண்டிருக்கும் நச்சு தான் பாஜக” என்று பெரம்பூரில் நடைபெற்ற கலை விழாவில் அ. சவுந்தரராசன் கூறினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய 24-ஆவது மாநாடு மதுரையில் நடைபெறுவதையொட்டி வடசென்னை மாவட்டக்குழுவின் சார்பில் கலை இலக்கியப் போட்டிகள் நடை பெற்றன. இதில் மாநிலம் முழுவதிலும் இருந்து நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர். போட்டிகளில் வெற்றி பெற்றவர் களுக்கு பரிசளிப்பு மற்றும் கலை விழா வரவேற்புக்குழுத் தலைவர் எஸ்.கே. மகேந்திரன் தலைமையில் ஞாயிறன்று (மார்ச் 30) பெரம்பூரில் நடைபெற்றது. மக்களுக்கான இலக்கியம் தான் உயிரோட்டமாக இருக்கும் இதில் மூத்தத் தலைவர் அ. சவுந்தர ராசன் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கினார். அப்போது அவர் பேசுகையில், “மக்க ளைப் பற்றி பேசுகிற போதுதான் அந்த இலக்கியம் உயிர் பெறும்.
இலக்கியம் என்பது அழகை வர்ணிப்பதிற்குத்தான் என்று கூறுபவர்கள் இடையே மக்களின் தேவைகளை மக்களிடம் எடுத்துச் சென்று அவர்களை ஆயுதப்படுத்துவதுதான் இலக்கியத்தின் லட்சியம் என்று கூறியவர்கள் கம்யூனிஸ்டுகள். கம்யூனிஸ்டுகள் உலகம் முழுவதும் உருவாக்கியிருக்கும் படைப்புகள் அத்தகையவை தான். முதலாளித்துவம் தோன்றிய போது, அதை எதிர்த்த போராட்டங்கள் வெடித்த போது, அதை எதிர்த்து புரட்சிகள் மலர்ந்த போது என ஒவ்வொரு காலகட்டத்திலும் ஏராளமான இலக்கியங்கள், நாவல்களை வடித்தனர். சாதி அடிப்படையில் பிரித்தாளும் விஷம் தான் பாஜக “இந்தியாவை கொஞ்சம் கொஞ்ச மாக சீரழித்துக் கொண்டிருக்கிற ஒரு நஞ்சு - விஷம் தான், இன்றைக்கு மத்தியில் ஆட்சியில் இருக்கிறது. மக்கள் படும் துயங்களை சொல்லியோ, அதை இந்த வகையில் நாங்கள் தீர்க்கப் போகிறோம் என்று சொல்லியோ, தேர்தலில் அவர்கள் பெறுவது இல்லை. மக்கள் பிரச்சனைகளை தீர்த்து, வாக்குகளைப் பெற முடியாது என்பது முதலாளித்துவ கட்சிகளுக்கு தெரியும். மோடி கூறிய எதையும் அவர் இதுவரை நிறைவேற்றவில்லை.
மாறாக, அவர்கள் என்ன சாதி, அவர்களின் பிரச்சனைகள்- கோரிக்கைகள் என்ன? என்பன போன்ற தரவுகளை எல்லாம் எடுத்து வகைப்படுத்தி, சாதிய அடிப்படையில் என்ன முழக்கம் வைத்தால், இந்த மக்களை ஏமாற்ற முடியும் என்பதை ஆராய்ந்து அதற்கான நடவடிக்கைகளை பாஜக மேற்கொள்கிறது. ஒவ்வொரு தேர்தலிலும் 10 ஆயிரம் கோடி, 15 ஆயிரம் கோடி என செலவு செய்து, தவறான தகவல்களை மக்களிடம் கூறி வெற்றி பெறுகிறார்கள். பெருமுதலாளிகளுக்கு மட்டுமே பாஜக ஆட்சியால் நன்மை இஸ்லாமியர்கள் நமக்கு எதிரி, பயங்கரவாதிகள், அவர்களால் இந்துக் களுக்கு ஆபத்து, இந்த முஸ்லிம்களுக்கு கம்யூனிஸ்டுகள், காங்கிரஸ் உடந்தை என்ற பிம்பத்தை உருவாக்குகிறார்கள்.
பின்னர் இந்துக்களை காப்பாற்ற எங்களால்தான் முடியும் என்று கூறுகிறார்கள். அதேபோல் அந்தந்த ஊரின் நிலைமைக்கு ஏற்றவாறு சாதியை பயன்படுத்துவது, மொழியை பயன்படுத்துவது, தலித்துகளுக்கு உள்ளேயே உள்ள பிரிவுகளை பயன் படுத்தி அவர்களுக்குள் மோதலை உரு வாக்கித்தான் வெற்றி பெறுகிறார்கள். பெருமுதலாளிகள் மட்டுமே இந்த ஆட்சியில் பயனடைந்திருக்கிறார்கள். உழைப்புச் சுரண்டலும் திருட்டுத் தான் அடுத்தவரிடம் இருந்து ஒரு பேனா வையோ, பென்சிலையோ எடுத்து விட்டால் அதற்கு பெயர் திருட்டு. ஆனால் உங்களின் உழைப்புக்கு உரிய கூலி வழங்காமல் உழைப்பை சுரண்டினால் அதற்கு பெயர் திருட்டு கிடையாது. இந்த நாட்டில் உழைப்பைச் சுரண்டுவதும் திருட்டு தான் என்பதை மக்களுக்கு உணர்த்த வேண்டும். இந்த மண்ணும், மண்ணுக்குள் இருக்கும் செல்வம் அனைத்தும் அத்தனை பேருக்கும் சொந்தம். அதானி அம்பா னிக்கு மட்டும் சொந்தமில்லை என்பதை தொழிலாளர்களுக்கும், பொதுமக்க ளுக்கும் புரிதலை ஏற்படுத்த வேண்டும். சாதி, மதம் என பிரிந்து நிற்காமல் அனைவரும் ஒன்றிணைந்து மக்களை பிளவுபடுத்தும் பாஜகவை, அதன் தேர்தல் சூழ்ச்சிகளை முறியடிக்க முன்வர வேண்டும்” என்று கேட்டுக் கொண்டார். வலதுசாரிகளை முறியடிக்க கலை- இலக்கியம் ஆயுதம் இயக்குநர் லெனின் பாரதி பேசுகையில், “நாட்டில் கருத்துரிமைக்கு எதிராக பல விஷயங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
சாவா என்ற ஒரு திரைப்படத்தில் ஒற்றுமையாக இருக்கும் மக்களை மதரீதியாக பிரிக்கும் ஆர்.எஸ்.எஸ்.சின் கேவலமான அரசியல் காட்சிப்படுத்தப்பட்டு இருக்கும். அந்த படத்தை முன்வை த்து நாக்பூரில் மிகப்பெரிய கலவரம் நடந்தது. வட இந்தியா முழுவதும் விஷம் கக்கும் அந்த திரைப்படத்தை பள்ளிக் குழந்தை களுக்கு காவி உடை அணிவித்து பார்க்க வைக்கிறார்கள். ஆனால் அதேநேரம் நாடு முழுவதும் சாதிக் கொடுமைகள் எப்படி நடக்கின்றன, ஒடுக்கப்பட்ட மக்கள் வட இந்தியாவில் கொடூரமாக வஞ்சிக்கப்படுகிறார்கள், தாக்கப்படுகிறார்கள் என்பதை காட்சிப்படுத்தியிருந்த சந்தோஷ் என்ற திரைப்படம் தடை செய்யப்படுகிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் ஒரு கட்சியின் அகில இந்திய மாநாட்டையொட்டி கலை இலக்கியப் போட்டி நடத்தப்பட்டது மிகவும் ஆரோக்கியமான- காலத்திற்கு தேவை யான, மக்களைப் பிரித்தாளும் ஆர்.எஸ்.எஸ்.-சுக்கு சவால் விடுகிற நிகழ்வு” என்று பெருமிதத்துடன் கூறினார். “நாங்கள் எல்லாம் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பாடலை கேட்டு, ஐ. மாயாண்டி பாரதி, நன்மாறன் போன்ற மிகச்சிறந்த தங்களுடைய வாழ்நாளை மக்களுக்காக அர்ப்பணித்த- உழைத்த- தோழர்களின் பேச்சை எல்லாம் கேட்டுத் தான், மக்களுக்கான இலக்கியத்தை படைக்க வேண்டும் என்று உந்தப்பட்டோம். அந்த வகையில், தற்போது நடைபெற்ற போட்டிகளில் பங்கேற்று மக்களுக்கான படைப்புகளை உருவாக்கிய அனைவருக்கும் நன்றி” என்றும் லெனின் பாரதி கூறினார்.
ரஷ்ய புரட்சி உலகம் முழுமைக்கும் படைப்பாளிகளை உருவாக்கியது பத்திரிகையாளர் அ. குமரேசன் பேசு கையில், “மக்களுடைய துயரங்களை, போராட்டங்களை எழுதுவதற்கு எனக்கு வாய்ப்பளித்தது மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாளே டான தீக்கதிர் தான். போட்டிகளில் பங்கேற்றவர்கள் மக்களின் துயரங்களை மிகவும் நேர்த்தி யாக ஓவியமாக படைத்துள்ளனர். அந்த ஓவியங்களை பார்ப்பவர்களுக்கு நிச்சய மாக சமூகத்திற்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற சிந்தனையை உரு வாக்கும்” என்றார். எழுத்தாளர் கரண் கார்க்கி பேசுகை யில், “மக்களுக்காக பணியாற்றக் கூடிய கம்யூனிஸ்ட் கட்சிகள் மட்டுமல்ல, உல கம் முழுவதும் உள்ள புரட்சிகர அமைப்பு கள் எல்லாம் கலை இலக்கியம் மூலம் தான் தங்களுடைய அரசியல் கருத்துக் களை கொண்டு செல்வார்கள். லெனின், புரட்சி நடத்தி பாட்டாளி வர்க்க ஆட்சியை நிறுவியது ரஷ்ய மக்களுக்காக மட்டு மல்ல, வடசென்னையில் உள்ள என்னை போன்ற படைப்பாளிகளை உருவாக்கு வதற்கும் தான்.
ரஷ்யாவின், கம்யூனிஸ்ட் கட்சியின் பல்வேறு படைப்புகள் தான் என்னை மக்க ளுக்கான படைப் பாளியாக மாற்றி யது. அப்படியான படைப்பாளிகளை உருவாக்குவதற்காக மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி ஒரு நல்ல முயற்சியை எடுத்துள்ளது” என்றார். படைப்பாற்றல் வெளிப்பட வாய்ப்பளித்த சிபிஎம் மாநாடு எழுத்தாளர் பிரி யசகி பேசுகையில், “ஒவ்வொரு குழந்தைக்குள்ளும் ஒரு நட்சத்திரம் மிளிர்கிறது. அந்த நட்சத்திரங்களை அடையாளம் கண்டு பெற்றோர்களும், ஆசிரியர்களும் அவர் களை வளர்த்தெடுத்தால் இந்த சமுதாயம், சமூகம் நல்ல முன்னேற்றமடையும். நான் முன்னேற வேண்டும் என்ற வெறியோடு, திறமையோடு மட்டும் இருந்தால் போதாது, இந்த சமுதாயத்திற்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற நல்ல எண்ணம் கொண்டவர்கள் நிச்சயமாக வாழ்க்கையில் வெற்றி பெறுவார்கள்” என் றார். “கலை இலக்கிய போட்டிகள் மூலம் இளம் தோழர்களின் படைப்பாற்றல் வெளிப்பட வாய்ப்பளித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாடு வெற்றி பெற வாழ்த்துக்கள்” என்றார். விளையாட்டுப் போட்டிகளையும் சிபிஎம் நடத்த வேண்டும் எழுத்தாளர் பாக்யம் சங்கர் பேசுகை யில், “ஒருவரின் எந்த பின்புலத்தையும் பார்க்காமல், சக மனி தனை சக மனிதனாக பார்க்க வேண்டும் என்பதை கற்றுக் கொடுத்தது கம்யூனிசம் தான்.. இதில் பங்கேற்ற படைப்பாளிகள் நிறைய நாவல்களை படிக்க வேண்டும். நிறைய பேரிடம் பழக வேண்டும். நிறைய பயணங்களை மேற்கொள்ள வேண் டும். மென்மேலும் மக்களின், தொழி லாளர்களின் துன்ப துயரங்களை படைப்பு களாக கொண்டுவர வேண்டும்” என்று கேட்டுக் கொண்டார்.
“மார்க்சிஸ்ட் கட்சி விளையாட்டு போட்டிகளையும் நடத்த வேண்டும்” என்று கேட்டுக் கொண்டார். கட்சியின் வடசென்னை மாவட்டச் செயலாளர் எம். ராமகிருஷ்ணன், கவிஞர்கள் ஏகாதசி, நா.வே. அருள், இரா.தெ. முத்து ஆகியோரும் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கி உரை யாற்றினார். முன்னதாக மாவட்டக்குழு உறுப்பினர் எம். ராஜ்குமார் வரவேற்றார். டி.சரவணன் நன்றி கூறி னார். மாநிலக்குழு உறுப்பினர் எல். சுந்தரராஜன், பகுதிச் செயலாளர் அ. விஜயகுமார், நிகழ்ச்சி ஒருங்கி ணைப்பாளர்கள் எஸ். பவானி, இரா. ஜோதி ஆர். இளங்கோவன், தி. ராஜேந்திர குமார், பா. ஹேமாவதி, ஆர். அபிராமி, தி. ஐஸ்வர்யா, உதயா, சி.விஜயன், வா. அகஸ்டின், இசக்கி நாகராஜ் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்