நாட்டின் வடகிழக்கு பகுதியில் அதிக மற்றும் அழகிய மரங் கள், மலைகளை கொண்ட அசாம் மாநிலத்தில் தொடர்ச்சியாக வனப் பகுதி அழிக்கப்பட்டு வருகிறது. இந்த காடு கள் அழிப்பு நடவ டிக்கை எதற்காக நிகழ்ந்து வருகிறது என்பது தொடர்பாக அசாம் பாஜக அரசு இதுவரை எவ்வித விளக்கமும் அளிக்க வில்லை. ஆனால் பொதுப் போக்கு வரத்துத் திட்டத்துக்காக மரங்கள் வெட்டப்பட்டு வருகிறது என உள்ளூர் அரசு அதிகாரிகள் மழுப்பலாக பதில் அளித்து வருகின்றனர். இந்நிலையில், அசாம் மாநிலத்தில் மரங்கள் அதிகமாக வெட்டப்படுவதை கண்டித்து பிரபல கிராபிட்டி கலைஞர் மார்ஷல் பருவா மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலருமான அங்குமான் போர்டோ லோய் தலைமையில் கவுகாத்தியின் பரலுமுக் பகுதியில் சனியன்று போராட் டம் நடத்தப்பட்டது. இந்த போராட் டத்தின் பொழுது கிராபிட்டி கலைஞர் மார்ஷல் பருவா தனது கைவண்ணத் தில் “கிக் ஹிமந்தா சேவ் நேச்சர்” (ஹிமந்தாவை உதறிவிட்டு இயற்கையை காப்பாற்றுங்கள்) என்ற தலைப்பில் கார்ட்டூன் சுவரொட்டியை சாலையில் ஒட்டினார். உடனே பாஜக அரசு முதல்வர் ஹிமந்தா பிஸ்வாவுக்கு எதிராக அவதூறு பரப்பியதாக கூறி, மார்ஷல் பருவா, சுற்றுச்சூழல் ஆர்வலர் அங்குமான் போர்டோலோய் ஆகிய இருவரையும் கவுகாத்தி போலீசார் கைது செய்து சிறை யில் அடைத்தனர்.