சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை நள்ளிரவில் உயர்த்தியது பாஜக அரசு!
புதுதில்லி, மார்ச் 7- சமையல் எரிவாயு விலையை, நள்ளிர வில் திடீரென சிலிண்டர் ஒன்றுக்கு 60 ரூபாய் முதல் 115 ரூபாய் வரை உயர்த்தி மோடி அரசு அதிர்ச்சி அளித்துள்ளது. வீட்டு பயன்பாட்டு சமையல் எரிவாயு விலை, 14.2 கிலோ சிலிண்டருக்கு 60 ரூபா யும், வணிக பயன்பாட்டு சமையல் எரிவாயு விலை 19 கிலோ சிலிண்டருக்கு 115 ரூபா யும் உயர்த்தப்பட்டு உள்ளது. மத்திய கிழக்கு ஆசியாவிலுள்ள ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரே லும் கொடூரமான யுத்தத்தை தொடுத்துள்ள தால், ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டு, அது கச்சா எண்ணெய் விநியோகத்தில் தடை யை ஏற்பட்டுள்ளது. எனினும், நாட்டில் போதுமான எல்பிஜி மற்றும் கச்சா எண்ணெய் கையிருப்பு 8 வாரங்களுக்கு பயன்படுத்தும் வகையில் உள்ளதாக ஒன்றிய பாஜக அரசு ஜம்பம் அடித்திருந்தது. அடுத்த 50 நாட்களுக்குத் தேவையான கச்சா எண்ணெய், எல்பிஜி கையிருப்பு உள்ளதாக ஒன்றிய பெட்ரோ லியத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி யும் கூறியிருந்தார். ஆனால், நள்ளிரவில் திடீரென எல்பிஜி சிலிண்டர் விலையை உயர்த்தி மோடி அரசு அதிர்ச்சி அளித்துள்ளது. இதன் மூலம் சென்னையில் வீட்டுப் பயன்பாட்டிற்கான சிலிண்டரின் விலை 928.50 ரூபாயாகவும், தில்லியில் 913 ரூபா யாகவும் அதிகரித்துள்ளது. அதேபோல வணிக பயன்பாட்டிற்கான எல்பிஜி சிலிண்ட ரின் விலை 2,043.50 ரூபாயாக உயர்ந்துள் ளது. அதுமட்டுமன்றி, பொதுமக்கள் அதிக அளவில் சிலிண்டர்களை முன்பதிவு செய்வ தைத் தடுப்பதற்கு, இரண்டு சிலிண்டர் முன்பதிவுகளுக்கு இடையே 21 நாட்கள் இடைவெளி இருக்க வேண்டும் என்ற கட்டுப்பாடும் விதிக்கப்பட்டுள்ளது.