tamilnadu

img

அஜித்குமார் படுகொலை பின்னணியில் பாஜக மோசடிப் பேர்வழி நிகிதா

அஜித்குமார் படுகொலை பின்னணியில் பாஜக மோசடிப் பேர்வழி நிகிதா

மதுரை/திண்டுக்கல், ஜூலை 4 - தனிப்படை போலீசாரால் இளைஞர் அஜித் குமார் அடித்துக் கொலை செய்யப் பட்ட சம்பவத்தில், காவல்துறைக்கு அழுத்தம் கொடுத்தது நிகிதா என்ற  பெண்மணி என்பதும், அவர் கிட்டத்தட்ட 6 மோசடி வழக்குகளில் கைதானவர் என்பதும் தெரியவந்துள்ள நிலையில், தற்போது அவர் பாஜகவின் தீவிர ஆதரவாளர் என்பது அம்பலமாகி இருக்கிறது.  அண்ணாமலை உள்ளிட்டோரோடு நெருங்கிய தொடர்பில் உள்ளவர் என்று  சமூக ஊடகங்களில் புகைப்பட ஆதா ரங்களும் வெளியாகி இருக்கின்றன. திண்டுக்கல் எம்.வி.எம். அரசு மக ளிர் கலைக்கல்லூரியில் நிகிதா தாவிர வியல் துறை தலைவராக பேராசிரிய ராக வேலை பார்த்து வருகிறார். கடந்த 2024-ஆம் ஆண்டு மே மாதம் தாவரவியல் துறை மாணவிகள் பேரா. நிகிதா மீது திண்டுக்கல் ஆட்சியரி டம் புகார் கொடுத்துள்ளனர்.  பேரா. நிகிதா, மாணவிகளை தகாத  வார்த்தைகளால் திட்டியும், மன உளைச் சலுக்கு ஆளாக்கியதாகவும் கூறப்படு கிறது. இதனால் நிகிதா மீது உரிய நட வடிக்கை எடுக்க வேண்டும் என்று திண்டுக்கல் ஆட்சியர் கல்லூரி நிர்வா கத்திற்கு பரிந்துரை செய்ததாக கூறப் படுகிறது.  இதனையடுத்து உரிய விசாரணை மேற்கொள்ளப்பட்டு அதன் முடிவுகள் தொடர்பாக மதுரையில் உள்ள கல்லூரிக் கல்வி இயக்குநருக்கு எம். வி.எம். கல்லூரியின் சார்பாக அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக கூறப்படு கிறது. ஆனால், நிகிதா தன்னுடைய அர சியல் பலத்தை பயன்படுத்தி தன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் பார்த்துக்கொண்டுள்ளார். இந்நிலையில் தான், மடப்புரம் காவலாளி அஜித் குமார் காவல் நிலைய படுகொலையை அடுத்து பேரா.  நிகிதா மீது பல்வேறு மோசடி புகார்கள் வெளிச்சத்திற்கு வந்த நிலையில் தற்போது கல்லூரி கல்வி இயக்குநர் நட வடிக்கை மேற்கொண்டு வருகிறார்.  கிட்டத்தட்ட 6 மோசடி வழக்குகளில் கைதாகியிருக்கும் நிகிதா சமூக வலைத் தளங்களில் பாஜக ஆதரவாளராக தன்னை அடையாளப்படுத்திக் கொண்டு ள்ளார். அண்ணாமலையுடன் நெருக்க மாக நின்று போஸ் கொடுத்த புகைப் படம் அவரது வலைத்தளங்களில் உள்ளன.  மூட நம்பிக்கைகளையும், அறி வியலுக்கு புறம்பான கருத்துக்களை யும், திமுகவிற்கு எதிராக வெறுப்பு கருத்துக்களையும் தனது சமூக வலைத்தளங்களில் நிகிதா பதி விட்டுள்ளார். தன்னை பாஜக ஆதர வாளராக காட்டிக்கொண்டது மட்டு மல்லாமல் தீவிரமாக செயல்பட்டதும் தெரிகிறது.  சமீபத்தில் மதுரையில் இந்து முன் னணி நடத்திய முருகன் மாநாடு குறித் தும், அதில் பங்கேற்ற அண்ணா மலை, பவன் கல்யாண் ஆகியோர்  புகைப்படங்களையும் வெளியிட்டுள் ளார். சேகர் பாபுவை எச். ராஜா ‘அல்லே லூயா பாபு’ என்று திட்டிய பதிவையும், ‘மாட்டுக்கறி உண்பது மனித உரிமை கிடையாது’ என்று அலகாபாத் உயர்நீதி மன்ற நீதிபதியின் கருத்தை வெளி யிட்டுள்ளார்.  கோவிலுக்குள் மட்டும் இந்துவாக போகாதே, வாக்குச் சாவடிக்குள் போகும் போதும் இந்து என்ற உணர் வோடு போக வேண்டும் என்றும் பதி  விட்டுள்ளார்.  முன்பு அதிமுக ஆதர வாளராகவும் இருந்த நிகிதா, நிகிதா ஜெயபெருமாள் என்ற முகநூல் ஐடி  மூலம், முன்னாள் முதல்வர் ஜெய லலிதா படத்தைப் பகிர்ந்து, அன்னையர் தின வாழ்த்து தெரிவித்திருப்பதுடன், பாஜக தலைவர் அண்ணாமலை படத்தைப் பகிர்ந்து, “தனக்குத் தானே பட்டம் சூட்டுபவர்கள் மத்தியில், உயர் நீதிமன்றமே அண்ணாமலைக்கு கொடுத்த பட்டம் ‘ஜனநாயக காவலர்’” என்றும், ஜெய்ஹிந்த் என்றும் பதிவிட்டுள்ளார்.  நிகிதா வேலை வாங்கித் தருவதாக பணமோசடியில் ஈடு பட்டது மட்டுமல்லாது, பல திருமண மோசடிகளிலும் ஈடுபட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்து மக்கள் கட்சி நடத்தும் அர்ஜூன் சம்பத்தைப் போலவே, தென்னிந்திய பார்வர்ட் பிளாக் என்ற பெயரில் பாஜக- வுக்கு வேலைபார்ப்பவர் கே.சி. திரு மாறன். இவரை திருமணம் செய்து நிகிதா ஏமாற்றி விட்டதாகக் கூறப்படுகிறது. இதுதொடர்பாக கே.சி. திருமாறன் பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில், “நிகிதாவை எனக்கு 21 வருஷத்துக்கு முன்னாடியே தெரியும். திருமண மோ சடியில் பாதிக்கப்பட்டதில் நானும் ஒரு வன். நிகிதாவுடன் ஒரு நாள் தான் என் னோட திருமண வாழ்க்கை. ஆனால் பல லட்சம் அவர் ஏமாற்றி விட்டார்” என்று திருமாறன் கூறியுள்ளார். பாஜக பேர்வழியான நிகிதாவின் அதிரவைக்கும் மோசடிகள், அனைத்து சமூக வலைத்தளங்களிலும் வைரல் ஆகி வருகிறது.  - இலமு