tamilnadu

img

மாணவர்களின் கல்வி வாய்ப்பை தடுப்பது தான் பாஜகவின் திட்டம்!

மாணவர்களின் கல்வி வாய்ப்பை தடுப்பது தான் பாஜகவின் திட்டம்!

நிதி வழங்க மறுப்பதன் மூலம் தமிழக மாணவர்களின் கல்வி உரிமையை பறிப்பதும், கல்வி பெறும் வாய்ப்பைத் தடுப்ப தும் தான் பாஜகவின் திட்டம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநி லச் செயலாளர் பெ. சண்முகம் கூறினார். ‘தென்னிந்தியாவின் முதல் கம்யூ னிஸ்ட்’, ‘சிந்தனைச் சிற்பி’ ம. சிங்கார வேலரின் 165-ஆவது பிறந்தநாள் செவ்வா யன்று (பிப்.18) கொண்டாடப்பட்டது. சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவல கத்தில் உள்ள அவரது சிலைக்கு கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். உறுதிமொழி ஏற்பு நிகழ்வும் நடைபெற்றது. இதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய பெ. சண்முகம், “அறிவையும், அறிவியலையும் ஏற்காத பாஜக, ஒன்றிய ஆட்சிப் பொறுப்பில் உள்ள சூழலில் சிங்காரவேலர் முன்னெடுத்த அறிவியல் கருத்துக்களை தொடர்ந்து மக்களிடம் கொண்டு செல்வோம். 150 ஆண்டுகளுக்கு முன்பே சாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்டு முன்னுதாரணமாக திகழ்ந்த தோழர் சிங்காரவேலரின் சிந்தனைகளைப் பின்பற்றுவோம், பரப்புவோம்” என்றார்.

தர்மேந்திர பிரதான் கருத்து சட்டவிரோதம்

பின்னர், செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்த பெ. சண்முகம், “தமிழகத்திற்கு நிதி ஒதுக்குவது தொடர்பான ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கருத்து, அரசியல் சட்டத்திற்கு விரோதமானது. குழந்தைகள் இத்தனை மொழி கற்க வேண்டும் என்று எந்தச் சட்டத்திலும் இடமில்லை. இதற்கு மாறாக, தமிழக அரசு பற்றி தவறான கருத்தைக் கூறி வருகிறார். அவரது அணுகுமுறை தமிழகத்திற்கு விரோதமானது” என்று குற்றம் சாட்டினார்.

தனியார் முதலாளிகளுக்கு ஆதரவாக பாஜக

“அரசு நடத்தும் கல்வி நிறுவனங்கள் மூடப்பட வேண்டும், தனியார் கல்வி நிறுவன முதலாளிகள் கொள்ளை லாபம் சம்பாதிக்க வேண்டும் என்பதற்காகவும் நிதிப் பாரபட்சம், நிதி வழங்க மறுப்பது போன்றவற்றை ஒன்றிய பாஜக அரசு செய்து கொண்டிருக்கிறது. நவீன துரோணாச்சாரியாராக மாறி, தமிழக மாணவர்களின் கல்வி வாய்ப்பை, உரிமையைப் பறிக்கிறது.  

அண்ணாமலையின் பேச்சு பத்தாம்பசலித்தனமானது

தகவல் தொழில்நுட்பம் வளர்ந்துள்ளது. எந்த ஒரு மொழியையும் மொழி பெயர்ப்பு செயலிகள் வாயிலாக மொழி யாக்கம் செய்து கொள்ள முடியும். இது  தெரியாமல், பாஜக தலைவர் அண்ணாமலை பத்தாம்பசலித்தனமாக பேசி வருகிறார். ஒருவர் விருப்பப்பட்டு எத்தனை மொழியை யும் கற்றுக் கொள்வதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்கிறது. கட்டாயப்படுத்தி திணிப்பதை ஏற்கவில்லை. இந்தியை படித்தாக வேண்டும் என்று கட்டாயப்படுத்தி திணிப்பதை ஏற்க முடியாது” என்றும் அவர் தெரிவித்தார். கட்சியின் மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் ஜி. செல்வா, செயற்குழு உறுப்பினர்கள் இரா. முரளி, சி. திருவேட்டை,  எஸ்.கே. முருகேஷ், கே. முருகன், இ. சர்வேசன், மாவட்டக்குழு உறுப்பினர் ஆர். அருள்குமார், பி. சுந்தரம், துறைமுகம் பகுதிச் செயலாளர் ஆர். குமார், துறைமுக தொழிற்சங்க தலைவர்கள் நரேந்திரன், கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் உடனி ருந்தனர்.