tamilnadu

img

மானாமதுரையில் பாரதியார் பிறந்த நாள் விழா

மானாமதுரையில் பாரதியார் பிறந்த நாள் விழா

சிவகங்கை, ஜன.18- சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் -கலைஞர்கள் சங்கம் சார்பில் மகாகவி பாரதியார் பிறந்த நாள் விழா வும், அரசியல் சாசன பாதுகாப்பு குறித்த கருத்த ரங்கமும் நடைபெற்றது. தமுஎகச மானாமதுரை கிளை சார்பில் நடை பெற்ற இந்நிகழ்ச்சிக்கு கிளைத் தலைவர் தேவ தாஸ் தலைமை வகித்தார். மாவட்டக் குழு உறுப்பி னர்களான ஓவிய ஆசிரியர் செல்வம், நந்தினி மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் பொன்னையா, குருசெல்வம், சுந்தரபாண்டியன், பாரதிசத்யா ஆகி யோர் முன்னிலை வகித்தனர். கிளைச் செயலாளர் ரசீந்திரகுமார் வரவேற்புரையாற்றினார். நிகழ்ச்சியில் ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் திருமாவளவன், த.மு.எ.க.ச. மாவட்டச் செயலாளர் அன்பரசன் ஆகியோர் கருத்துரையாற்றினர். நகர்மன்றத் தலைவர் மாரியப்பன் கென்னடி, திமுக நகரச் செயலாளர் பொன்னுச்சாமி, கிராம நிர்வாக அலுவலர் மீனாபிரபாகரன், மாநிலக்குழு உறுப்பினர் ஜீவசிந்தன், தமுஎகச மாவட்டத் தலைவர் கவிஞர் சிபூ, மாவட்டப் பொருளாளர் பாலமுருகன், துணைச் செயலாளர் மாணிக்கவள்ளி, சமூக ஆர்வலர் சரவணன் கருப்பையா உள்ளிட்டோர் வாழ்த்துரையாற்றினர். கிளைப் பொருளாளர் பாரதி தங்கராஜ் நன்றியுரையாற்றினார்.