வங்கிகளுக்கு ரூ.58,000 கோடி நிதி இழப்பு
வங்கியில் கடன் பெற்று வெளி நாடுகளுக்கு தப்பியோடிய வர்கள் தொடர்பாக நாடாளு மன்ற மக்களவையில் கேள்வி எழுப்பப் பட்டது. இதுதொடர்பாக ஒன்றிய நிதித் துறை இணையமைச்சர் பங்கஜ் சவுத்ரி திங்களன்று மாலை மக்களவையில் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்தார். அதில்,“இந்தியாவில் மோசடி செய்து வெளிநாடு தப்பி ஓடிய விஜய் மல்லையா, நீரவ் மோடி, நிதின் ஜே.சந்தேசரா, சேத்தன் ஜே. சந்தேசரா, திப்தி சி.சந்தேசரா, சுதர்சன் வெங்கட்ராமன், ராமானுஜம் சேஷரத்தி னம் உள்ளிட்ட15 தொழிலதிபர்களால் வங்கிகளுக்கு ரூ.58,000 கோடி நிதி இழப்பு ஏற்பட்டுள்ளது. அதனால் இந்த 15 நபர்களையும் தப்பியோடிய பொ ருளாதார குற்றவாளிகள் சட்டம் 2018 யின் கீழ் தப்பியோடிய பொருளாதா ரக் குற்றவாளிகளாக (எப்ஐஓ - Fugitive Economic Offender) அறிவிக்கப்படு கிறது” என அறிக்கையில் கூறப்பட் டுள்ளது.