47 இந்திய மீனவர்களை வங்கதேச அரசு விடுவித்தது!
புதுதில்லி, டிச. 9 - சிறைப்பிடிக்கப்பட்ட 47 இந்திய மீனவர்களை வங்க தேச அரசு செவ்வாய்க்கிழ மை (டிச. 9) அன்று விடு வித்துள்ளது. இதேபோல், 38 வங்கதேச மீனவர்கள் மற்றும் அவர்களது படகு களையும் இந்திய அதி காரிகள் விடுவித்துள்ளதாக, ஒன்றிய வெளியுறவு அமைச் சகம் தெரிவித்துள்ளது. வங்கதேசத்தில் முகமது யூனுஸ் தலைமையிலான ஆட்சி அமைந்தது முதல் இந்தியாவுடனான உறவுகள் விரிசலடையத் துவங்கியது. எனினும், இருநாடுகளின் அரசுகளும், இதுவரை 95 இந்திய மற்றும் 90 வங்க தேச மீனவர்களை விடு தலை செய்து அவரவரது தாயகங்களுக்கு அனுப்பி வைத்திருப்பது குறிப்பிடத் தக்கது.
