பாஜகவின் வகுப்புவாதத்துக்கு பின்னடைவு
வக்பு சட்டத் திருத்தத்தில் உச்சநீதிமன்ற தலையீடு
சிபிஎம் பொதுச் செயலாளர் எம்.ஏ.பேபி பேட்டி
பாலக்காடு வக்பு சட்டத் திருத்தத்தில் உச்சநீதிமன்றத்தின் தலையீடு பாஜகவின் வகுப்புவாதக் கொள்கை களுக்கு ஒரு பின்னடைவு என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் பொதுச் செயலாளர் எம்.ஏ. பேபி கூறினார். பாலக்காட்டில் ஊடகங்க ளுக்கு பேட்டியளித்த எம்.ஏ. பேபி மேலும் கூறுகையில்,” மக்க ளிடையே பிரிவினையை ஏற் படுத்த பாஜக முயற்சிக்கிறது. வக்பு சட்டத் திருத்தம் அரசியல மைப்பிற்கு எவ்வளவு விரோத மானது மற்றும் ஜனநாயக விரோ தமானது என்பதை எதிர்க்கட்சி கள் சுட்டிக்காட்டிய போது, ஒன் றிய அரசு அதை ஏற்கவில்லை. பிற மதங்களைச் சேர்ந்தவர் களை பிற மதங்களின் அறக் கட்டளைகளில் சேர்க்க முடியுமா என்று நீதிமன்றமே கேட்டது. சிபிஎம் 24ஆவது அகில இந்திய மாநாடு சுட்டிக்காட்டி யது போலவே, பாஜக நவ-பாசி சப் போக்குகளைக் காட்டுகிறது. அவர்கள் மக்களைப் பிரிக்க வழிகளைத் தேடுகிறார்கள். இந் தியாவின் உன்னத நோக்கங்க ளுக்கு எதிராக செயல்படும் ஒரு அரசாங்கத்தால் ஒன்றிய அரசு ஆளப்படுகிறது. இந்தியா வேறு எந்த முஸ்லிம் நாட்டையும் விட அதிக முஸ்லிம் மக்கள் தொகை கொண்ட நாடு. பாஜக நெருப்பு டன் விளையாடுகிறது. இதற்கு மிகச் சமீபத்திய உதாரணம் வக்பு சட்டத் திருத்தம். இதற்குப் பின் னால் ஆர்எஸ்எஸ் உள்ளது. உச்ச நீதிமன்றம் இந்த அளவுக்கு தலையிட்டிருப்பது பாராட்டத் தக்கது. அதன் அடிப்படையில், மோடியும் அமித் ஷாவும் சுயபரி சோதனை செய்வார்கள் அல்லது தங்கள் தவறுகளை சரிசெய் வார்கள் என்று நாங்கள் எதிர் பார்க்கவில்லை. ஆனால் சிபிஎம் அவர்களிடம் கோரு கிறது, காலம் கடந்த இந்த வேளையிலேனும், தவறுகளை சரிசெய்ய வேண்டும்”என அவர் தெரிவித்தார்.