9ஆம் வகுப்பு மாணவன் உருவாக்கிய எரிவாயு கசிவு கண்டறியும் கருவிக்கு விருது
வடகிழக்கு மாநிலங்களில் ஒன் றான மேகாலயாவின் கிழக்கு காசி மலை மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஜேம்ஸ் டொனால்ட் கார் கோங்கர். இவர் மௌங்காப் மாவட்ட கிறிஸ்டியன் பல்நோக்கு மேல்நிலைப் பள்ளியில் 9ஆம் வகுப்பு படிக்கிறார். இந்நிலையில், ஜேம்ஸ் எரிவாயு கசி வைக் கண்டறிந்து விபத்துகளைத் தவிர்க்கும் தடுப்பு நடவடிக்கைகளைத் தொடங்கும் புதிய அமைப்பை உரு வாக்கியுள்ளார். அதாவது ‘ஸ்மார்ட்’ கேஸ் கசிவுவை கண்டறியும் அமைப்பை கண்டறிந்துள்ளார். இந்த கண்டு பிடிப்புக்கு வடகிழக்கு அறிவியல் கண் காட்சி விழாவில் ஜேம்ஸுக்கு தேசிய விருது வழங்கப்பட்டுள்ளது.
