முஸ்லிம்களை துப்பாக்கியால் சுடுவது போல வீடியோ வெளியிட்ட அசாம் பாஜக முதல்வர்
பாஜக ஆளும் அசாம் மாநில முதலமைச்சராக இருப்பவர் ஹிமந்த பிஸ்வா சர்மா. ஊழல் நடவடிக்கை மிரட்டலால் காங்கி ரஸ் கட்சியில் இருந்து பாஜகவிற்கு சென்றவர். இந்நிலையில், பாஜக தனது அதி காரப்பூர்வ சமூக ஊடகப் பக்கத்தில், பாயிண்ட் பிளாங்க் ஷூட் (Point blank shoot)” என்ற தலைப்பில் அசாம் முதல மைச்சர் ஹிமந்த பிஸ்வா சர்மா துப்பாக்கி யால் சுடுவது போன்ற உண்மையான காட்சிகளுடன், முஸ்லிம்களைப் பிரதி பலிக்கும் வகையில் தாடி மற்றும் குல்லா அணிந்த நபர்களின் ஏஐ மூலம் உரு வாக்கப்பட்ட உருவங்கள் இணைக்கப் பட்டுள்ளன. அதாவது முஸ்லிம் மக்களை துப்பாக்கியால் சுடுவது போன்ற விளக் கத்துடன் வீடியோ வெளியிடப்பட்டன. இந்த வீடியோவிற்கு அரசியல் கட்சிகள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பத்திரிகை யாளர்கள் மத்தியில் கடும் கொந்த ளிப்பை ஏற்படுத்தியதையடுத்து, நாடு முழுவதும் கண்டனங்கள் கிளம்பின. இதனால் மிரண்டு போன பாஜக பதிவை நீக்கியது. தலைவர்கள் கண்டனம் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலா ளர் கே.சி. வேணுகோபால்,”இது இனப் படுகொலைக்கான அழைப்பு. ஆகும். குறிப்பாக இது ஏதோ சாதாரண ட்ரோல் வீடியோ அல்ல, அதிகார மட்டத்தில் இருந்து பரப்பப்படும் விஷம்” என கண்ட னம் தெரிவித்தார். அதே போல திரிணா முல் காங்கிரஸ் எம்.பி., சாகரிகா கோஷ், ”இது வன்முறையைத் தூண்டும் செயல். வீடியோ வெளியிட்ட பாஜக மீது உபா கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று வலியுறுத்தினார்.
