tamilnadu

img

மருத்துவத் தலைநகராக உயர்ந்து நிற்கும் தமிழ்நாடு!

மருத்துவத் தலைநகராக உயர்ந்து நிற்கும் தமிழ்நாடு!

நாட்டின் மருத்துவத் தலைநகராக தமிழ்நாடு உயர்ந்து நிற்பதாக முத லமைச்சர் மு.க. ஸ்டாலின் பெருமிதம் தெரி வித்துள்ளார். தமிழகத்தில் அரசு மருத்துவமனை களில் காலியாக உள்ள 2,642 மருத்துவர் பணியிடங்களுக்கான நியமன ஆணை களை, சென்னை திருவான்மியூரில் உள்ள  ஸ்ரீ ராமச்சந்திரா கன்வென்ஷன் சென்ட ரில், புதன்கிழமையன்று நடைபெற்ற விழாவில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்கினார். அப்போது, அவர் பேசியதாவது: உயிர்காக்கக்கூடிய மருத்துவர்களை, மக்கள் மிகவும் உயர்வாக பார்க்கிறார்கள். தமிழ்நாடு இன்றைக்கு நாட்டின் மருத்து வத் தலைநகராக உயர்ந்து நிற்பதற்கு கலைஞர் உருவாக்கிய மருத்துவ கட்டமைப்புகள்தான் காரணம்.  இந்தக் கட்டமைப்பு சரியான முறையில் செயல்படவேண்டும் என்றால், நிச்சயமாக அதற்கேற்றது போல நம்மு டைய மருத்துவர்கள் தேவை. அதுவும்  அரசாங்க மருத்துவமனைக்கு வரக்கூடிய  ஏழை, எளிய கிராமப்புற நோயாளிகளை, கர்ப்பிணிப் பெண்களை, குழந்தைகளின் உடல் நோய்களை மட்டுமல்ல, அவர்களின் மனநிலை, புறச்சூழல் இதையும் புரிந்துகொள்ளக் கூடிய மருத்துவர்கள் தேவை. கிராமத்திலிருந்தும், சின்னச் சின்ன நகரங்களிலிருந்தும் டாக்டர்கள் உருவானால்தான் அனைத்துத் தரப்பு மக்களுக்கும் நல்ல முறையில் சிகிச்சை கிடைக்கும். இன்றைக்கு சிறிய, சிறிய நகரங்களி லிருந்தும் கூட, இத்தனை மருத்துவர்கள் உருவாகி இருக்கிறீர்கள் என்றால் அதற்கெல்லாம் வித்திட்டவர் கலைஞர். அவரது வழியில், தமிழக அரசு மருத்துவக் கட்டமைப்பை இந்திய அளவில் மட்டுமல்ல, உலக அளவில் அனைவரும் பாராட்டக்கூடிய அளவில் இன்றைக்கு நாம் உருவாக்கியிருக்கிறோம். மருத்துவர்களான நீங்கள் இல்லாமல் நிச்சயமாக சொல்கிறேன், இந்தத் திட்டங்கள் எல்லாம் இல்லை. உங்கள் எல்லோருக்கும் வாழ்த்துகள். இவ்வாறு முதல்வர் பேசினார்.