வரி விதிப்பில் முறைகேட்டில் ஈடுபட்டவர்களை கைது செய்திடுக!
மதுரையில் மாதர் - வாலிபர் சங்கங்கள் ஆர்ப்பாட்டம்
மதுரை, ஜூலை 4- மதுரை மாநகராட்சி வரிவிதிப்பில் முறைகேட்டில் ஈடுபட்டவர்களை கைது செய்யக்கோரி இந்திய ஜன நாயக வாலிபர் சங்கம், அனைத்திந் திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மது ரை மாநகர் மாவட்டக் குழுக்கள் சார் பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு அரசு மற்றும் மதுரை மாவட்ட நிர்வாகம் மதுரை மாநகரா ட்சியின் ஐந்து மண்டலங்களிலும் விரி வான பாரபட்சமற்ற விசாரணையை வெளிப்படை தன்மையுடன் நடத்த வேண்டும். ஊழலில் ஈடுபட்ட குற்ற வாளிகளை கண்டறிந்து கைது செய்து சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தி நடை பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாதர் சங்க மாவட்டச் செயலாளர் வை. ஜென்னியம்மாள் எம்.சி., தலைமை வகித்தார். வாலிபர் சங்க மாவட்டச் செயலா ளர் டி. செல்வா கண்டன உரையாற்றி னார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாமன்ற உறுப்பினர் டி. குமரவேல் ஆதரித்துப் பேசினார். இதில் மாதர் சங்க மாவட்ட நிர்வாகி கள் பி. மல்லிகா, காசு பாண்டி, பாத்திமா, வாலிபர் சங்க மாநில செயற்குழு உறுப்பினர் நிருபனா, மாவட்டத் தலை வர் அ. பாவேல் சிந்தன், மாவட்டப் பொருளாளர் எஸ். வேல் தேவா, மாவட்ட நிர்வாகி க.கௌதம் பாரதி உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.