நீங்கள் இப்படியா..?
உயர்நீதிமன்றங்களில் பெண்களின் பிரதிநிதித்துவம் அதி கரிக்க வேண்டும். அதில் அந்தந்த உயர்நீதிமன்றங்களின் தேர்வுக்குழு (கொலீஜியம்) கவனம் செலுத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சூர்ய காந்த் வலியுறுத்தியுள்ளார். பெண் வழக்கறிஞர்கள் மத்தியில் வரவேற்பும், விமர்சனமும் இந்தக் கருத்துக்கு எழுந்திருக்கிறது. நாடு முழுவதும் இதை உடனடியாகக் கொண்டு வருதல் அவசியம் என்று வரவேற்றுள்ளனர். இவர் பொறுப்பில் உள்ள உச்சநீதி மன்றத் தேர்வுக்குழு இதை நடை முறைப்படுத்தி முன்னுதாரணமாகக் காட்டலாமே என்றும் பலர் கூறியுள்ள னர். உயர்சாதிகளைச் சேர்ந்தவர்கள் தான் இன்னும் பெரும்பாலான இடங்க ளில் உள்ளனர் என்பதையும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று சமூகநீதி ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.
இவரும் இப்படித்தான்..!
ஆளுநர்கள் மாற்றத்தில் இமாச்சலப் பிரதேசத் தில் பொறுப்பு வகித்த சிவ் பிரதாப் சுக்லா, தெலுங்கானாவுக்கு மாற்றப்பட்டிருக்கிறார். தனது பொறுப்பில் இருந்து விடுபடும் நிகழ்வில், அவர் தெரிவித்த கருத்து பெரும் சர்ச்சையையும், கண்ட னங்களையும் கிளப்பியுள்ளது. மாநிலம் முன்னேறாததற்கு இங்கு வேலைக்கலாச்சாரம் என்பதே இல்லை என்று சொல்லிவிட்டார். தற்போது காங்கிரஸ் கட்சி அங்கு ஆட்சியில் உள்ளது. அந்த அரசாங்கத்தைக் குறை சொல் வதாக நினைத்துக் கொண்டு மாநில மக்கள் மீதே குற்றம் சாட்டியுள்ளார். ஆளுநர்கள் பாலமாக இருப்பதற்குப் பதிலாக, மாநிலங்களின் நலன்களுக்கு எதிராக இருக் கிறார்கள் என்ற தங்கள் குற்றச்சாட்டை இவரின் கருத்து நிரூபிக்கிறது என்கிறார்கள் காங்கிரஸ்காரர்கள். உள்ளூர் பாஜகவினரோ, இந்த ஆளுநர்களை நியமிப்பது பாஜக அல்லாத ஆட்சியாளர்களுக்கு நெருக்கடி கொடுப்பதற் காகத்தான். இவர்களோ நமக்கு நெருக்கடியை உரு வாக்குகிறார்கள் என்று புலம்பித் தள்ளுகிறார்கள்.
நாமும் இப்படியா..?
நிதிஷ் குமாரின் முடிவு பீகார் அரசியலில் பர பரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இது எதிர் பாராத முடிவு என்று அவரது கட்சிக்காரர்கள் சொன்னாலும், சட்டமன்றத் தேர்தலின்போதே பாஜக தலைமைக்கும் நிதிஷ் குமாருக்கும் இடை யில் இந்தப் புரிதல் இருந்தது என்று பாஜகவினர் சொல்கிறார்கள். தற்போது நிதிஷ் குமாரின் புதல்வர் நிஷாந்த்தின் அரசியல் நுழைவு கட்சிக்குள் கடும் அதிருப்தியை உருவாக்கியிருக்கிறது. வாரிசு அரசியலைக் கடுமையாக விமர்சித்து விட்டு, தற்போது கட்சியை வாரிசிடமே ஒப்படைப்பதா என்று கேள்வி எழுப்புகிறார்கள். நிதிஷ் குமாரின் தில்லி நகர்வு, மாநிலத்தில் ராஷ்டிரிய ஜனதா தளத்திற்கு ஒரு வாய்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது என்ற நிலையில், ஐக்கிய ஜனதா தளத்தை முழுமையாக விழுங்கும் உத்திகளை பாஜக வகுப்பதாகச் சொல்லப்படுகிறது.
நீங்களும் இப்படித்தான்..!
உ.பி. முதலமைச்சர் ஆதித்யநாத்துக்கு எதி ராகக் கருத்து தெரிவித்த சாமியார் அவி முக்தேஸ்வரானந்த் மீது வழக்குகள் குவி கின்றன. அவருக்கு ஆதரவாக பாஜகவில் ஒரு தரப்பு இறங்கினாலும், ஆதித்யநாத் தலைமையிலான கோஷ்டி அதற்கு இணங்கவில்லை. மாட்டுக்கறி தொடர்பான அவரின் கருத்து உண்மையென்பதால் தான் இவ்வளவு நெருக்கடியைத் தருகிறார்கள் என்று எதிர்கோஷ்டி கூறுகிறது. “மாட்டுக்கறி ஏற்று மதி செய்பவர்களிடம் கட்சி நிதி வாங்கிக் கொள்ள வில்லையா.. நீங்களும் இப்படித்தானே” என்றும் கட்சிக்குள் கேள்வி எழுப்பப்படுகிறது. ஆதித்யநாத் தைப் பொறுத்தவரை, தன்னை மீறி ஒரு சாமியார் வந்துவிடக்கூடாது என்பதில் கவனமாக இருக்கி றார். இப்போதைக்கு வழக்குகள் குவிந்தாலும் தனது பிடிவாதத்தில் இருந்து அவிமுக்தேஸ்வரானந்த் விலகவில்லை. அடுத்த ஆண்டுத் தேர்தலில் பாதிப்பு ஏற்படும் என்று ஆதித்யநாத்தின் எதிர்கோஷ்டி கருதுகிறது.
