tamilnadu

img

பாம்பு விஷத்திற்கு ஒட்டகத்திலிருந்து முறிவுப் பொருள்

பாம்பு விஷத்திற்கு ஒட்டகத்திலிருந்து முறிவுப் பொருள்

பாம்புக் கடியால் இந்தியாவில் வருடந்தோறும் 58000 இறப்புகள் ஏற்படுகின்றன. பெரும்பாலும் விவசாயத் தொழிலாளிகள் பாதிக்கப்படுகின்றனர். இறப்பை தவிர இரத்த கோளாறுகள், தசை முடக்கம், தசை சிதைவு, பக்கவாதம் ஆகியவையும் ஏற்படுகின்றன. நான்கு இந்திய பெரும் பாம்புகள் என்று சொல்லப்படும் நல்ல பாம்பு, கட்டு விரியன், கண்ணாடி விரியன், சுருட்டை விரியன் ஆகியவற்றிற்கு எதிராக ஒரு பொதுவான விஷ முறிவு மருந்து உண்டாக்கப்பட்டுள்ளது. இது இருளர்களால் எடுக்கப்பட்ட விஷத்தை மிகை செயலிழப்பு செய்து குதிரைகளுக்கு தடுப்பூசி மூலம் செலுத்தி பின்னர் அவற்றில் உண்டாகும் பிளாஸ்மாவிலுள்ள ஆன்டிபாடி எனும் நோய் எதிர்ப்பு பொருளினால் உருவாக்கப்படுகிறது.  இந்தியாவில் பல்வேறு பிரதேசங்களிலுள்ள வேறுபட்ட பாம்பு இனங்கள் மற்றும் அவற்றின் விஷத்தின் சேர்க்கை ஆகியவற்றினால் இந்த விஷ முறிப்பு ஓரளவுக்கே பலன் அளிக்கிறது. ஆகவே குறிப்பிட்ட பிரதேசத்திற்கு ஏற்றவாறு அல்லது எல்லா விஷங்களுக்கும் வேலை செய்கிற ஒரு முறிவை கண்டுபிடிக்க ஆய்வுகள் செய்யப்பட்டுள்ளன. ஆப்பிரிக்காவில் 18 வகை பாம்பு இனங்களில் செய்யப்பட்ட ஆய்வுகள் எல்லாவகை விஷங்களுக்கும் முறிப்பை தரும் எதிர்ப்பொருள் குறித்த நம்பிக்கையை அளித்துள்ளது. ஒட்டகங்களில் மரபணு மாற்றத்தின் மூலம் உண்டாகும் அசாதாரணமான எதிர்ப்பொருளை பயன்படுத்தி புதிய விஷமுறிவு பொருளை உண்டாக்கியுள்ளனர். இது குதிரையிலிருந்து எடுக்கப்படுவதை விட சிக்கனமானதும் திறனானதுமாகும். இந்தியாவில் செய்யப்பட ஆய்வுகள் இந்த முறிவுப் பொருள் விஷத்தினால் ஏற்படும் பல்வேறு பாதிப்புகளை சரி செய்கிறது எனக் காட்டியுள்ளது.