tamilnadu

img

5 ஆஸ்கர் விருதுகளை அள்ளியது அனோரா

5 ஆஸ்கர் விருதுகளை அள்ளியது அனோரா

97-ஆவது ஆஸ்கர் விருது வழங்கும் நிகழ்ச்சி, அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள டால்பி தியேட்டர் அரங்கில் (இந்திய நேரப்படி திங்கள்கிழமையன்று காலை 5.30 மணிக்கு) நடைபெற்றது. இதில், 2024-ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட திரைப்படங்களை கவுரவிக்கும் வகையில் 23 பிரிவுகளில் ஆஸ்கர் விருது வழங்கப்பட்டது. அகாடமி ஆப் மோஷன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸ் (AMPAS) சார்பாக இந்த விருது வழங்கும் நிகழ்வை நகைச்சுவை நடிகர் கோனன் ஓ’ பிரையன் முதல் முறையாக தொகுத்து வழங்கினார். இந்நிலையில், ஷான் பேக்கர் இயக்கத்தில் ஏட்ரியன் பிராடி, மிக்கி மேடிசன் உள்ளிட்டோர் நடித்த ரொமாண்டிக் காமெடி  திரைப்படமான “அனோரா” சிறந்த இயக்குநர், சிறந்த படம், சிறந்த நடிகை, சிறந்த திரைக்கதை, சிறந்த படத்தொகுப்பு ஆகிய 5 பிரிவுகளில் ‘ஆஸ்கர்’ விருதை வென்றது.