tamilnadu

img

அங்கித் திவாரி ஜாமீன் மனு மீண்டும் தள்ளுபடி!

அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி தாக்கல் செய்த ஜாமீன் மனுவை திண்டுக்கல் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
திண்டுக்கல் அரசு மருத்துவரிடம் ரூ.20 லட்சம் லஞ்சம் பெற்ற வழக்கில், கடந்த டிசம்பர் 1-ஆம் தேதி கைதான அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
இதைத் தொடர்ந்து, திண்டுக்கல் நீதிமன்றத்திலும், சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையிலும் ஜாமீன் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. இந்த நிலையில், மீண்டும் இரண்டாவது முறையாக திண்டுக்கல் நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி கடந்த 1-ஆம் தேதி மனுத்தாக்கல் செய்திருந்தார். அங்கித் திவாரி தாக்கல் செய்த ஜாமீன் மனுவை மீண்டும் தள்ளுபடி செய்து திண்டுக்கல் மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.