tamilnadu

img

விதைகளுக்கு கொள்ளை விலை நிர்ணயிக்க கார்ப்பரேட் நிறுவனங்களை அனுமதிப்பது சாகுபடி செலவை அதிகரிக்கும் விதை மசோதாவிற்கு அகில இந்திய விவசாயிகள் சங்கம் கடும் எதிர்ப்பு

விதைகளுக்கு கொள்ளை விலை நிர்ணயிக்க  கார்ப்பரேட் நிறுவனங்களை அனுமதிப்பது சாகுபடி செலவை அதிகரிக்கும் விதை மசோதாவிற்கு அகில இந்திய விவசாயிகள் சங்கம் கடும் எதிர்ப்பு

புதுதில்லி விதைகளுக்கு கொள்ளை விலை நிர்ணயிக்க கார்ப்பரேட் நிறுவனங்க ளை அனுமதிப்பது சாகுபடிச் செல வை அதிகரிக்கும் என விதை மசோதாவிற்கு அகில இந்திய விவசாயிகள் சங்கம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அகில இந்திய விவசாயி கள் சங்க தலைவர் அசோக் தாவ்லே, பொ துச்செயலாளர் விஜூ கிருஷ்ணன் வெளி யிட்டுள்ள அறிக்கையில்,“இந்தியாவின் விதைத் துறையை கார்ப்பரேட் நிறுவனங்க ளின் கட்டுப்பாட்டில் கொண்டு செல்லவும், விதை இறையாண்மையை சரணடைய செய்ய வும் ஆர்எஸ்எஸ்-பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி (என்டிஏ) அரசால் மேற்கொள்ளப்படும் ஒரு பெரிய தலையீடாக “விதை மசோதா 2025” மசோதா உள்ளது. கார்ப்பரேட் சார்பு மசோதா விவசாயி-விரோத, கார்ப்பரேட் சார்பு கொண்ட இந்த விதை மசோதா வரைவை அகில இந்திய விவசாயிகள் சங்கம் கடுமை யான கண்டனத்துடன் எதிர்க்கிறது. சிறு விவசா யிகளின் உரிமையை கவர்ந்தும், இந்தியாவின் விதை இறையாண்மையை ஒரு சில பன்னாட்டு மற்றும் உள்நாட்டு கார்ப்பரேட் நிறுவ னங்களிடம் சரணடையச் செய்யும் வகையில் ஆர்எஸ்எஸ் - பாஜகவின் பெரிய அரசியல் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த விதை மசோதா உள்ளது. இந்தியாவில் விவசாய நெருக்கடி ஆழப்படும் இக்கட்டான நேரத்தில் தான் ஆர்எஸ்எஸ் - பாஜக அரசு இந்த அதீத கார்ப்ப ரேட் சார்பு மசோதாவை கொண்டு வருவதை அகில இந்திய விவசாயிகள் சங்கம் தீவிர கவனத்தில் கொள்கிறது. குறிப்பாக விதை களுக்கு கொள்ளை விலை நிர்ணயிக்க கார்ப்ப ரேட் நிறுவனங்களை அனுமதிப்பதன் மூலம் சாகுபடிச் செலவை அதிகரிக்கும். இது கவ னத்தில் கொள்ளப்படவில்லை. விவசாயத்தின் மீது கார்ப்பரேட் கட்டுப்பாடு அதிகரிப்பது விவசாய நெருக்கடியையும், விவ சாயிகள் தற்கொலைகளையும் தீவிரப் படுத்தும் என பல விஞ்ஞான ஆய்வுகள் நிரூ பித்துள்ளன. ஆனால் விவசாயிகளை அழுத்தி சுரண்டுவதை துரிதப்படுத்தும் அத்தியாவசி யக் கூறுகளை விதை மசோதா வரைவு கொண் டுள்ளது. உதாரணமாக, விதைகளுக்கு கொள்ளை விலை நிர்ணயிக்க கார்ப்பரேட் கூட்டு நிறுவனங்களுக்கு இது ஒரு சாதகமான சூழ்நிலையை உருவாக்கும். விதைகள் குறித்த எந்தவொரு புதிய சட்டமும் - விதை மசோதா 2025 இன் வரைவு போன்றது தான். ஏற்கெனவே “பிபிவிஎப்ஆர் (PPVFR - Protection of Plant Varieties and Farmers Right) சட்டம் 2001”இன் கீழ் நிறு வப்பட்ட முற்போக்கான சட்டப் பாது காப்புகளுடனும், “சிபிடி (CBD - Convention on Biological Diversity)” மற்றும் “ஐடிபிஜி ஆர்எப்ஏ (ITPGRFA - International Treaty on Plant Genetic Resources for Food and Agri culture)” -இன் கீழ் இந்தியாவின் சர்வதேச உறு திப்பாடுகளுடனும் முரண்படாமல், செயல்பூர்வ மாக இணைந்து செயல்பட வேண்டும் என்ப தில் அகில இந்திய விவசாயிகள் சங்கம் உறுதி யான நம்பிக்கை கொண்டுள்ளது.  இந்த தேசிய மற்றும் சர்வதேச உறுதிப் பாடுகள் கூட்டாக, மரபணு வளங்களின் மீதான தேசிய இறையாண்மையை உறுதிப் படுத்துகின்றன மற்றும் உள்நாட்டு வகை களைப் பாதுகாக்கின்றன. இவை விவசா யிகளை, இனப்பெருக்கம் செய்பவர்களாக, பாதுகாப்பவர்களாக மற்றும் உயிரி யல் பல்வகைமையின் நியாயமான காப்பா ளர்களாக அங்கீகரிக்கின்றன. விதைகளைச் சேமிப்பது, பயன்படுத்துவது, பரிமாறுவது மற்றும் விற்பனை செய்வது ஆகிய உரிமை களை உறுதி செய்கின்றன. இந்திய கட்டமைப்பை  நீர்க்கச் செய்யும் ஆனால் இதற்கு மாறாக, விதை மசோதா 2025இன் வரைவு, அதிகமாக மையமாக்கப்பட்ட மற்றும் கார்ப்பரேட்மயமாக்கப்பட்ட ஒரு ஒழுங்குமுறை அமைப்பை அறிமுகப்படுத்து கிறது, இது விவசாயி - மைய பாதுகாப்பு களை பலவீனப்படுத்துவதற்கும், உயிரியல் பல்வகைமை பாதுகாப்பு மற்றும் விவசாயி களின் உரிமைகள் குறித்த இந்தியாவின் சட்ட கட்டமைப்பை நீர்த்துப்போகச் செய்வதற்கும் ஆபத்தாக உள்ளது.  இந்த வரைவு, சந்தைக் கட்டுப்பாடு மற்றும் விதை அமைப்புகளின் கடுமையான முறைப்படுத்தலை ஆதரிப்பதாகத் தெரிகிறது. இது உள்நாட்டு வகைகள், பொது நிறுவ னங்கள் மற்றும் தேசிய/சர்வதேச விதை பிணை யங்களை ஓரம் கட்டிவிடும். துல்லியமாகச் சொல்ல வேண்டுமென்றால், விதை மசோதா 2025 இன் புதிய வரைவு, பிபிவிஎப்ஆர் சட்டம் 2001 இன் விதிமுறைகளில் இருந்து இந்தி யாவின் விதை ஒழுங்குமுறை கட்டமைப்பை கணிசமாக விலகிச் செலுத்துகிறது மற்றும் விதைத் துறையில் சமநிலையை பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு சாதகமாக மாற்றுகிறது. அழைப்பு இந்த தேச விரோத, விவசாயி-விரோத மற்றும் மக்கள்-விரோத மசோதாவிற்கு எதிராக ஒரு பெரிய போராட்டத்தை துவக்கவும், விவ சாயிகள் மற்றும் பிற அனைத்து ஜனநாயக சக்திகளையும் அகில இந்திய விவசாயிகள் சங்கம் ஒன்றுபட அழைக்கிறது. இந்திய விவசா யிகளின் உயிர்வாழ்வுக்கு இந்தப் போராட்டம் முக்கியமானது” என அதில் கூறப்பட்டுள்ளது.