tamilnadu

img

40 கட்சித் தலைவர்களும் அவசியம் பங்கேற்க வேண்டும்!

40 கட்சித் தலைவர்களும் அவசியம் பங்கேற்க வேண்டும்!

தமிழகத்தின் நலனைக் கருதி, மார்ச் 5 அன்று நடைபெறும் கூட்டத் தில் அனைத்துக் கட்சிகளும் கலந்து கொள்ள வேண்டும் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.  தமிழ்நாட்டில் பதிவு செய்யப் பட்ட மொத்தம் 45 கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலை யில், காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி, சிபிஐ, விசிக உள்ளிட்ட திமுக கூட்டணிக் கட்சிகள் மட்டு மன்றி,  தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சியான அதிமுக மற்றும் அதன் கூட்டணியிலுள்ள தேமுதிக உள்ளிட்ட கட்சிகளும் அனைத்து கட்சி கூட்டத்தில் பங்கேற்போம் என்று அறிவித்துள்ளன.  பாஜக தலைவர் அண்ணா மலை, நாம் தமிழர் ஒருங்கிணைப் பாளர் சீமான் உள்ளிட்ட சிலர்  மட்டும் கூட்டத்தில் பங்கேற்ப தில்லை என்று அறிவித்துள்ளனர். இந்நிலையில் தான், தனிப்பட்ட கவுரவம் பார்க்காமல்- தமிழ கத்தின் நலனைக் கருதி, மார்ச்  5 அன்று நடைபெறும் கூட்டத்தில் அனைத்துக் கட்சிகளும் கலந்து கொள்ள வேண்டும் என்று முதலமைச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஏற்கெனவே இதுதொடர்பான வேண்டுகோளை விடுத்திருந்த அவர்,  அதையே நாகப்பட்டினத்தில் திங்களன்று கட்சி பிரமுகரின் திருமண விழாவில்  பேசுகையில் மீண்டும் வலியுறுத்தி யுள்ளார்.  “மும்மொழிக் கொள்கையை கட்டாயப்படுத்தி கொண்டு வந்து விட வேண்டும் என்று ஒன்றிய அரசு திட்டம் போட்டுக் கொண்டி ருக்கிறது. தொகுதி மறுசீர மைப்பையும் கொண்டு வந்து எப்படியாவது தமிழகத்தின் உரி மையை, அந்த எண்ணிக்கையை குறைக்க வேண்டும் என்பதில் கவனம் செலுத்திக் கொண்டிருக் கின்றனர். அதனால் தான், மார்ச் 5 அன்று அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்டியிருக்கிறோம். தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்துள்ள 40 கட்சிகளுக்கு அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு விடுத்திருக் கிறோம்.  பெரும்பாலானோர் இக்கூட்டத் தில் பங்கேற்கவுள்ளதாக தகவல்  தெரிவித்துள்ளனர். குறிப்பிட்ட ஒரு சிலர், வர இயலாது என்று கூறி யுள்ளனர்.

தொகுதி மறுசீரமைப்பு தொடர்பான அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு வரமுடியாது என்று சொன்னவர்கள் தயவுகூர்ந்து வர வேண்டும் என அழைப்பு விடுக் கிறேன். தமிழ்நாட்டு நலனை கருத்தில் கொண்டு அனைத்துக் கட்சி கூட்டத்தில் 40 கட்சித் தலை வர்களும் பங்கேற்க வேண்டும்.  இது தனிப்பட்ட திமுகவுக்கான பிரச்சனை அல்ல. தமிழ்நாட்டு உரிமைக்காக நடக்கும் கூட்டம். இந்த அனைத்துக்கட்சி கூட்டத்தை அரசியலாகப் பார்க்க வேண்டாம். இது நம்முடைய உரிமை. நாடாளுமன்றத்தில் இப்போது தமிழ்நாடு 39 மக்களவை உறுப்பி னர்களை வைத்துக்கொண்டே, ஒவ்வொன்றையும் போராடிதான் பெற வேண்டியதாக உள்ளது. இந்நிலையில், மறுசீரமைப்பு என்கிற பெயரில் பிரதிநிதித்து வத்தை மேலும் குறைப்பது என்பது முற்றிலும் தமிழ்நாட்டு உரிமைக்கு எதிரானது.

ஆகவே, தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவத்தால்தான் நாம் உரிமையை மீட்க முடியும் என்ற  ஒருமித்த நோக்கத்துடன் அனை வரும் அனைத்துக் கட்சி கூட்டத்தில் பங்கேற்க வேண்டும் என்று அழைப்பு விடுக்கிறேன். இவன் என்ன அழைப்பது, நாம்  என்ன போவது என்று இதில் கவுர வம் பார்க்காதீர்கள். இது தமிழ் நாட்டின் பிரச்சனை என்பதை சிந்தித்துப் பார்த்து கூட்டத்தில் பங்கேற்க வேண்டும் என்று தெரிவித்துக் கொள்கிறேன்” என்று முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.