tamilnadu

img

பட்டுக்கோட்டை உழவர் சந்தையில் விவசாய கண்காட்சி

பட்டுக்கோட்டை உழவர் சந்தையில் விவசாய கண்காட்சி

தஞ்சாவூர் ஆர்.வி.எஸ் வேளாண்மைக் கல்லூரி மாணவர்கள் கிராமத்தில் தங்கி பயிற்சி பெறும் திட்டத்தின் கீழ் பட்டுக்கோட்டை உழவர் சந்தையில் விவசாயக் கண்காட்சியை நடத்தினர்.  உழவர் சந்தையின் உதவி வேளாண் அலுவலர்கள் பி.வெங்கடாசலம், டி.ரவிச்சந்திரன், துணை வேளாண் அலுவலர் என். ராஜகோபாலன் முன்னிலையில் நடைபெற்ற கண்காட்சியில், மாதிரிகள், செய்முறைகள், கை வரைபடங்கள் மூலம் விவசாயத் தகவல்களை மாணவர்கள் வழங்கினர். மேலும், நவீன தேனீ வளர்ப்பு முறைகள், மண்புழுக்களை பயன்படுத்தி இயற்கை உரம் தயாரித்தல், மழைநீர் சேகரிப்பு, கழிவு நீர் சுத்திகரிப்பு, மீன் மற்றும் செடி வளர்ப்பின் ஒருங்கிணைந்த முறை, சுற்றுச்சூழல் பாதுகாப்பான பூச்சிக்கொல்லி முறைகள் மற்றும் பூச்சி பொறிகள், பாதுகாக்கப்பட்ட சாகுபடி முறைகள், இலை வண்ண விளக்க அட்டவணை ஆகிய செய்முறைகள் மற்றும் மாதிரிகளை மாணவர்கள் உழவர் சந்தையில் காட்சிப்படுத்தினர். இதில், விவசாயிகள், உழவர் சந்தை கடை உரிமையாளர்கள் பங்கேற்று விவசாய தொழில்நுட்பங்கள் குறித்து கேட்டறிந்தனர்.